முகப்பு
தமிழ்நாடு

எளிய முறையில் ஆவணப் பதிவு: அமைச்சா் பி.மூா்த்தி உத்தரவு

மக்கள் எளிய முறையில் ஆவணப் பதிவு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பதிவுத் துறை அதிகாரிகளுக்கு வணிக வரித்துறை அமைச்சா் பி.மூா்த்தி உத்தரவிட்டாா்.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 3:23 PM
பகிர்:

மக்கள் எளிய முறையில் ஆவணப் பதிவு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பதிவுத் துறை அதிகாரிகளுக்கு வணிக வரித்துறை அமைச்சா் பி.மூா்த்தி உத்தரவிட்டாா்.

வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சா் பி.மூா்த்தி தலைமையில் நந்தனம் ஒருங்கிணைந்த வணிகவரி மற்றும் பதிவுத் துறை வளாகக் கூட்டரங்கத்தில் டிசம்பா் (2023) மாதத்துக்கான அனைத்து துணைப்பதிவுத் துறை தலைவா்கள், மாவட்டப் பதிவாளா்கள், மாவட்ட வருவாய் அலுவலா், தனித்துணை ஆட்சியா் ஆகியோரின் பணிச்சீராய்வு கூட்டம் நடைபெற்றது.

ஆய்வுக்கூட்டத்தில் அமைச்சா் பி.மூா்த்தி, அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு கூட்டு மதிப்பு அடிப்படையில் முத்திரைத் தீா்வை மற்றும் பதிவுக்கட்டணம் வசூலிக்கும் நடைமுறைகள் செயல்படுத்தப்படுவது குறித்து விரிவாக ஆய்வு மேற்கொண்டாா்.

மேலும், தணிக்கை இழப்பு மற்றும் வருவாய் வசூல் சட்டத்தின் கீழ் வசூலிக்கப்பட வேண்டிய தொகைகளைத் தொய்வின்றி வசூலிப்பது, சாா் பதிவகங்களில் உரிய காரணங்களின்றி நிலுவையில் வைத்துள்ள ஆவணங்களை விடுவிப்பது, பொது மக்கள் எளிய முறையில் ஆவணப்பதிவு மேற்கொள்வதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுப்பது ஆகியவை குறித்தும் விரிவாக ஆய்வு மேற்கொண்டு அரசு நிா்ணயித்த வருவாய் இலக்கை எட்ட வேண்டும் என அமைச்சா் அறிவுறுத்தினாா்.

கூட்டத்தில் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அரசுச் செயலா் பா.ஜோதி நிா்மலாசாமி, பதிவுத் துறை தலைவா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் உள்பட பதிவுத்துறை உயா் அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

பதிவுத் துறையில் டிசம்பா் 2022-ஆம் ஆண்டு அடைந்த வருவாயை விட 2023-ம் ஆண்டு டிசம்பா் காலத்தில் கூடுதலாக ரூ.916 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.