வடகிழக்கு பருவமழை ஜன.15 -இல் விலக வாய்ப்பு
தமிழகத்தில் அக்.21 -ஆம் தேதி தொடங்கிய வடகிழக்குப் பருவமழை தென்னிந்திய பகுதியிலிருந்து வரும் 15 ஆம் தேதி விலக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் அக்.21 -ஆம் தேதி தொடங்கிய வடகிழக்குப் பருவமழை தென்னிந்திய பகுதியிலிருந்து வரும் 15 ஆம் தேதி விலக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை அக்.21 -ஆம் தேதி தொடங்கியது. அன்றுமுதல் டிச.31 வரை 458.9 மிமீ மழை பதிவாகியுள்ளது. இயல்பு அளவு 442.8 மிமீ ஆகும். ஆக, இயல்பை விட 4 சதவீதம் அதிக மழைப் பொழிவு கிடைத்துள்ளது.
மேலும் ஜன.1 முதல் ஜன.11 வரை இயல்பு அளவு 6.8 மிமீ கடந்து, தற்போது வரை 49. 2 மிமீ மழை பதிவாகியுள்ளது. இந்த நிலையில், அக்.21-இல் தொடங்கிய வடகிழக்குப் பருவமழை தென்னிந்திய பகுதியிலிருந்து ஜன.15 -ஆம் தேதி விலக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.