முகப்பு
தமிழ்நாடு

நடராஜர் கோயில் கோபுரத்தில் கொடியேற்றம்

குடியரசு நாள் விழாவை முன்னிட்டு சிதம்பரம் கோயிலில் தேசியக்கொடி ஏற்றப்பட்டது. 

Updated On : 26 ஜனவரி 2024, 10:51 am IST
சிதம்பரம் நடராஜர் கோயில் கோபுரம்
பகிர்:

நாடு முழுவதும் 75-வது குடியரசு நாள் விழா கொண்டாட்டங்கள் வெகு விமர்சையாக நடைபெற்றுவரும் நிலையில் அரசு அலுவலகங்கள் மட்டுமின்றி மக்கள் கூடும் ஆன்மிக தலங்களிலும் கொடியேற்ற நிகழ்வுகள் நடைபெற்றன.

சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயில் கிழக்கு கோபுரத்தில் பொதுதீட்சிதர்களால் தேசியக்கொடி வெள்ளிக்கிழமை ஏற்றப்பட்டது.

முன்னதாக  பொதுதீட்சிதர்களின் கோயில் கமிட்டி செயலாளர் டி.எஸ்.சிவராம தீட்சிதர் தலைமையில் வெள்ளி தாம்பாலத்தில் மூவர்ண கொடிவைக்கப்பட்டு சிவகாமசுந்தரி சமேத நடராஜபெருமானுக்கு பூஜை செய்யப்பட்டது.  

Advertisement

Advertisement

பின்னர் பொதுதீட்சிதர்களால் கொடி, மேளதாளங்களுடன் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு 152 அடி உயர கிழக்கு கோபுரத்தில் ஏற்றப்பட்டு இனிப்பு வழங்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments