ராமேசுவரம்: பாம்பன் பாலத்தில் ரயில்வே அமைச்சர் அஷ்விணி வைஷ்ணவ் சனிக்கிழமை(ஏப். 5) இரவு ஆய்வு மேற்கொண்டார்.
பாம்பன் ரயில் பாலத்தை திறந்து வைக்க பிரதமர் நரேந்திர மோடி, நாளை தமிழகம் வருகைதர உள்ளார்.
பாம்பன் ரயில் பாலத்தின் கட்டுமானப் பணிகள் கடந்த டிசம்பர் மாதமே நிறைவுபெற்றது. பிரதமரின் தேதிக்காக திறப்பு விழா தள்ளிப்போன நிலையில், வருகின்ற 6 ஆம் தேதி பிரதமர் மோடியால் திறந்துவைக்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது. இலங்கையில் இருந்து ஹெலிகாப்டரில் மண்டபத்தில் நாளை காலை 11:50 மணியளவில் வந்திறங்கும் பிரதமர் மோடி, பின்னர், அங்கிருந்து காரில் புறப்பட்டு பாம்பன் தேசிய நெடுஞ்சாலை பாலத்தில் அமைத்துள்ள மேடைக்கு சென்று புதிய ரயில் பாலத்தை திறந்து வைக்கிறார்.
இந்த நிலையில், அமைச்சர் அஷ்விணி வைஷ்ணவ், அமைச்சர் எல். முருகன் ஆகியோர் பாம்பன் பாலத்தில் இன்று ஆய்வு மேற்கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.