கோப்புப்படம் 
தமிழ்நாடு

பாபநாசம் ரயில் நிலையத்தில் நிற்காமல் சென்ற ரயில்.. அப்புறம் என்ன?

பாபநாசம் ரயில் நிலையத்தில் நிற்காமல் சென்ற ரயில்.. அப்புறம் என்ன என்பது பற்றி..

DIN

பாபநாசம் ரயில் நிலையத்தில் நிற்க வேண்டிய பயணிகள் ரயில், நிற்காமல் சென்றநிலையில், சற்று தொலைவு சென்று பிறகு, மீண்டும் பின்னோக்கி இயக்கப்பட்டு ரயில்நிலையம் வந்து பயணிகளை ஏற்றிச் சென்ற வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகியிருக்கிறது.

மயிலாடுதுறையில் இருந்து திருச்சி செல்லும் விரைவு ரயில் வழக்கமாக காலை 8.50 மணி அளவில் தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் இரயில் நிலையத்தில் ஒரு நிமிடம் நின்று செல்லும்.

ஆனால், இன்று காலை வழக்கம் போல வந்த இரயில் பாபநாசம் ரயில் நிலையத்துக்கு வந்தது. ஆனால், ரயில் நிலையத்தில் நிற்காமல் ஒரு கிலோ மீட்டர் தொலைவு சென்றது. பின்னர்தான் தவறு உணரப்பட்டு, அந்த ரயில் பாதி வழியில் நிறுத்தி, ரயில் பின்னோக்கி இயக்கப்பட்டு பாபநாசம் ரயில் நிலையத்திற்கு வந்தடைந்தது.

பின்னர் அங்கு காத்திருந்த பயணிகளை ஏற்றிக்கொண்டு திருச்சி நோக்கிப் புறப்பட்டுச் சென்றது.

மயிலாடுதுறையில் இருந்து திருச்சி வரை இயக்கப்படும் இந்த ரயிலில் அதிக அளவு அரசு பணியில் வேலை செய்பவர்கள் மற்றும் வேலைக்குச் செல்வோர் பயன்படுத்துவது வழக்கம்.

இன்று பாபநாசத்தில் ரயில் நிற்காமல் சென்றதால் அவ்வாறு வேலைக்குச் செல்வதற்காகக் காத்திருந்த பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். ஆனால், ரயில் மீண்டும் ரயில்நிலையம் வந்ததால் நிம்மதியடைந்தனர்.

இதற்கிடையே, ரயில் நிற்காமல் சென்று பின்னர் பின்னோக்கி இயக்கப்பட்டு பயணிகளை ஏற்றிச்சென்ற விடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உத்தரகண்டில் நிலச்சரிவு: வீடுகள் இடிந்து விழுந்ததில் 5 பேர் மாயம்!

வயநாட்டில் பழங்குடியினரை சந்தித்த பிரியங்கா காந்தி!

சென்னை விமான நிலையத்தில் ரூ.20 கோடி போதைப் பொருள் பறிமுதல்

பாகிஸ்தானைத் தாக்கினால் செளதி களமிறங்கும்! உடன்பாடு கையொப்பம்!

நடிகர் ரோபோ சங்கர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி!

SCROLL FOR NEXT