சிரி... சிரி...
என்னது... நூறு ரூபாய்க்கு குறைஞ்சு தர்மம் வாங்க மாட்டீயா?
'என்னது... நூறு ரூபாய்க்கு குறைஞ்சு தர்மம் வாங்க மாட்டீயா?'
'தங்கம் என்ன விலை விக்குது தெரியுமா, தாயி?'
-அ.சுஹைல் ரஹ்மான், திருச்சி.
'வாங்குன கடனை எப்படிடா அடைக்கப் போறே?'
'புதுசா யார்கிட்டயாவது கடன் வாங்கித்தான்!'
-ஏ. மூர்த்தி, புல்லரம்பாக்கம்.
'பத்து நிமிஷம்தான் நடந்தேன்... அதுக்குள்ள சுகர் ரொம்ப குறைஞ்சுப் போச்சு!'
'ஆச்சரியமாயிருக்கே!'
'நான் சுகர் வாங்கிட்டுப் போன பையில ஓட்டை இருந்தது... நான் கவனிக்கலை!'
-தீபிகா சாரதி, சென்னை- 5.
'ஃபர்ஸ்ட் ஆஃபுக்கு அப்புறம் தான் பிக்அஃப் ஆச்சு!'
'படமா?'
'இல்லை... பாப்கார்ன் சேல்ஸ்!'
-எம்.ஏ.ஆதம், அரக்கோணம்.
'நீ பகல்லதானப்பா பிச்சை எடுக்கிற... அப்புறம் ஏன் உன்னை ராப்பிச்சைன்னு கூப்பிடுறாங்க?'
'நான் நல்லா ராப் சாங்ஸ் பாடி பிச்சை எடுப்பேன், தாயி!'
-சு.அருண் பிரகாஷ், தூத்துக்குடி.
'போரில் எதிரிக்கு இரட்டை வெற்றியாமே?'
'ஆமாம், போர்க்களத்தில் நம் படையினரை வீழ்த்திவிட்டான்... நம் மன்னர் ஒளிந்திருந்த பதுங்குக் குழியையும் கண்டுபிடித்துவிட்டான்!'
'அமைச்சரே... இன்று என்னென்ன நிகழ்ச்சிகள்?'
'அரசவையில் புலவரின் பாடலைக் கேட்ட பின், மகாராணியுடன் நகர்வலம் செல்கிறீர்கள், மன்னா!'
'ஒரே நாளில் இரண்டு தண்டனையா?'
-பேகம்பூர் ஷம்மு, திண்டுக்கல்.
'ஹோட்டலுக்குப் போய் உட்கார்ந்து பேசலாமா?'
'காசு குறைவா இருக்கு... டீக் கடையிலேயே நின்னு பேசலாம்!'
'பஸ்ல இடமிருக்கா?'
'எங்கே போக?'
'சமோசா, வடை விற்க...'
'ஒரேயொரு ஆளுக்கு ரெண்டு டீ எதுக்கு?'
'இன்னோரு டீ காசுதரப் போறவருக்கு... அவர் பின்னாடி வர்றார்!'
- பர்வதவர்த்தினி, பம்மல்.
'நல்ல வேலைக்காரியாச்சே... ஏன் வேலையைவிட்டு நிறுத்திட்டே?'
'வீட்டுக்கு வர்ற விருந்தாளிங்கயெல்லாம் என்னைவிட அவ அழகாயிருக்கான்னு சொன்னாங்க!'
'நேத்து ராத்திரி நீ குடிச்சிட்டு வந்ததை எப்படி உன் மனைவி கண்டுபிடிச்சா?'
'வீட்டுக்கதவை தட்டி, 'ரூம் வாடகைக்குக் கிடைக்குமா?'ன்னு கேட்டுட்டேன்!'
'படிச்சிட்டு எந்த வேலைக்கும் போகாம ஊரைச் சுத்திக்கிட்டு இருந்தானே உங்க பையன்... இப்ப அவன் என்ன பண்றான்?'
'அவனுக்குக் கல்யாணம் பண்ணிவச்சேன்... பொண்டாட்டி சொல்ற வேலையெல்லாம் ஒழுங்கா செய்யறான்!'
'நீ செஞ்ச சாப்பாட்டை ஒரு நாய்கூடத் தின்னாது...'
'சத்தம் போட்டு பேசாதீங்க... உள்ளே உங்கம்மாவும் உங்க தங்கச்சியும் இதைத்தான் சாப்பிடுறாங்க!'
-கே.இந்து குமரப்பன், விழுப்புரம்.
'அது டவுன் மாடுன்னு எப்படி கரெக்டா சொல்றே?'
'புல்லு கொடுத்தா முட்ட வருது... பாலிதீன் பேப்பர்னா விரும்பிச் சாப்பிடுதே!'
-வி.ரேவதி, தஞ்சை.