சென்னை, கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில், கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்களுக்கு புதியதாக தெரிவு செய்யப்பட்ட 166 உதவி விற்பனையாளர்களுக்கான 2 நாள்கள் பயிற்சி முகாமினை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்த கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி. 
தமிழ்நாடு

கோ-ஆப்டெக்ஸ் உதவி விற்பனையாளர்களுக்கு பயிற்சி

அண்ணா நூற்றாண்டு நூலகத்தில், கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்களுக்கு புதியதாக தெரிவு செய்யப்பட்ட 166 உதவி விற்பனையாளர்களுக்கு 2 நாள்கள் பயிற்சி முகாம் நடைபெற்றது

DIN

சென்னை, கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில், கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்களுக்கு புதியதாக தெரிவு செய்யப்பட்ட உதவி விற்பனையாளர்களுக்கு இரண்டு நாள் பயிற்சி முகாம் நடைபெற்றது.

கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்களுக்கு முதல்வரால் பணி ஆணை வழங்கப்பட்ட 166 உதவி விற்பனையாளர்களுக்கு சிறப்புவாய்ந்த வணிக ஆலோசனை நிறுவனத்தின் மூலம் சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெற்ற பயிற்சி முகாமை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

இந்த பயிற்சி முகாம் வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமை இரண்டு நாள்கள் நடைபெற்றது.

கோ-ஆப்டெக்ஸ் விற்பனையாளர்களுக்கான பயிற்சி முகாமை தொடங்கி வைத்து பேசும் அமைச்சர் காந்தி-பயிற்சி முகாமில் பங்கேற்றுள்ள உதவி விற்பனையாளர்கள்

இந்த பயிற்சி முகாமில் உதவி விற்பனையாளர்களுக்கு கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தை பற்றியும் கோ-ஆப்டெக்ஸில் விற்பனை செய்யப்படும் கைத்தறி ரகங்களை பற்றியும் விற்பனையை மேம்படுத்துவதற்கு தேவையான ஆலோசனைகள் கைத்தறி பொருள்கள் வாடிக்கையாளர்கள் கவரும் வகையில் விற்பனை நிலையங்களில் காட்சிப்படுத்துதல் குறித்த வணிக ஆலோசனைகள் நிறுவனத்தின் மூலம் விரிவாக விளக்கப்பட்டது.

மேலும், இந்த உதவி விற்பனையாளர்களுக்கு இரண்டு நாளும் ் சென்னையில் உள்ள கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்களுக்கு நேரில் அழைத்து சென்று நேரடி விற்பனை பயிற்சியும் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர்த் துறை அரசு செயலாளர் வே.அமுதவல்லி, கைத்தறி துறை இயக்குநர் மகேஸ்வரி ரவிக்குமார், கோ-ஆப்டெக்ஸ் மேலாண்மை இயக்குநர் தீபக் ஜேக்கப் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மின்னலைப் பிடித்து... கௌஷானி!

ஸ்ரீ சாயி மார்க்கம் தீபாவளி மலர் 2025

வங்கதேச வரைபடத்தில் இந்திய மாநிலங்கள்? பாகிஸ்தானுக்கு பரிசளித்த புத்தகத்தால் சர்ச்சை!

செவப்புச் சேல... அங்கனா ராய்!

வெள்ளக்கோவில் நிதி நிறுவன உரிமையாளர் கொலை வழக்கு: நிலத்தரகர் கைது

SCROLL FOR NEXT