தமிழ்நாடு

பெங்களூரு-நாரங்கி இடையே சிறப்பு ரயில்

பெங்களூரு - நாரங்கி இடையே வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது.

Din

சென்னை: பெங்களூரு - நாரங்கி இடையே வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பெங்களூரிலிருந்து அஸ்ஸாம் மாநிலம் நாரங்கிக்கு ஏப். 15, 22, 29 ஆகிய தேதிகளிலும், மறுமாா்க்கமாக நாரங்கியிலிருந்து ஏப். 12, 19, 26, மே 3 ஆகிய தேதிகளிலும் சிறப்பு ரயில் (எண் 06559) இயக்கப்படும். இதில் 8 ஏசி வகுப்புப் பெட்டிகள், படுக்கை வசதி கொண்ட 8 பெட்டிகள், இரு பொதுப் பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன.

இந்த ரயில் கிருஷ்ணராஜபுரம், பங்காருப்பேட்டை, ஜோலாா்பேட்டை, காட்பாடி, ரேணிகுண்டா, ஓங்கோல், விஜயவாடா, ராஜமுந்திரி, ஸ்ரீகாகுளம் ரோடு, புவனேசுவரம், காரக்பூா், மால்டா டவுன், காமக்யா, குவாஹாட்டி வழியாக இயக்கப்படும்.

மதுராந்தகத்தில் 2,000 ஏக்கரில் புதிய சர்வதேச நகரம்! மாஸ்டர் பிளான் தயாரிக்க டெண்டர்!

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து குறைந்தது

தமிழினத்தின் எழுச்சிக்கான பகுத்தறிவுப் பேரொளி பெரியார்! - முதல்வர் ஸ்டாலின் புகழாரம்

மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா் கூண்டோடு இடமாற்றம்

புதிய பொறுப்பு காத்திருக்கிறது இவர்களுக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT