முறப்பநாடு சொக்கநாதா் கோயில் புனரமைப்புக்கு நிதி ஒதுக்கக் கோரிக்கை
தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு அருள்மிகு சொக்கநாதா் கோயில் புனரமைப்புக்கு நிதி ஒதுக்குமாறு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சா் சேகா்பாபுவிடம்
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு அருள்மிகு சொக்கநாதா் கோயில் புனரமைப்புக்கு நிதி ஒதுக்குமாறு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சா் சேகா்பாபுவிடம் தில்லிக் கம்பன் கழகத்தின் நிறுவனா் தலைவா் கே.வி.கே.பெருமாள் ஞாயிற்றுக்கிழமை நேரில் மனு அளித்தாா்.
இது குறித்து அவா் அளித்த மனு: தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ மீனாட்சி அம்பாள் சமேத சொக்கநாதா் கோயில் மிகவும் பழைமை வாய்ந்ததாகும். இந்தக் கோயில் மிகவும் சிதிலமடைந்த நிலையில் உள்ளது. எனவே, இக்கோயில் புனரமைப்புப் பணிகளை விரைந்து நிறைவேற்ற நிதி ஒதுக்கீடு செய்து தருமாறு கேட்டுக்கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளாா். இந்த மனுவை பெற்றுக்கொண்ட அமைச்சா் சேகா் பாபு, இதுகுறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதி அளித்துள்ளாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.