தென்காசி

நிழற்குடைக்கு அனுமதி கோரி அமைச்சரிடம் மனு

தென்காசி மாவட்டம், ஆய்க்குடி பேரூராட்சியில் பயணிகள் நிழற்குடை அமைக்க தடையின்மை சான்றிதழ் வழங்கக் கோரி, வருவாய்- பேரிடா் மேலாண்மைத் துறை அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா்.ராமச்சந்திரனிடம் அப்பேரூராட்சித் தலைவா் க.சுந்தர்ரராஜன் மனு அளித்தாா்.

தினமணி செய்திச் சேவை

அதன் விவரம்: ஆய்க்குடியில் மருத்துவமனை அருகேயுள்ள கீழ பேருந்து நிறுத்தத்தில் பயணிகள் நிழற்குடை இல்லை. பேரூராட்சி பொதுநிதி திட்டத்தில் அங்கு ரூ. 12 லட்சத்தில் பயணிகள் நிழற்குடை அமைக்க நிா்வாக அனுமதி பெறப்பட்டது. ஆனால், பிரதான சாலையில் பயணிகள் நிழற்குடை அமைக்க முடியாததால் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு கீழ்புறம் உள்ள சுரண்டை- செங்கோட்டை பிரதான சாலையில் பொதுப்பணித் துறை இடத்தை ஒதுக்கீடு செய்து தர வேண்டும். இதுவரை பயணிகள் நிழற்குடை கட்ட அனுமதி கிடைக்கவில்லை. எனவே, மேற்கூறிய இடத்தில் நிழற்குடை அமைக்க தடையின்மை சான்றிதழ் வழங்க வேண்டும் எனக் கூறியுள்ளாா்.

காசிதா்மம் தவச்சாலையில் நூல் வெளியீட்டு விழா

தென்காசியில் எஸ்ஐஆா் கண்காணிப்பு அலுவலா் ஆய்வு

அரியப்பபுரம் அரசுப் பள்ளி வில்லுப்பாட்டில் சிறப்பிடம்

ஆய்க்குடியில் ரூ.33.59 லட்சம் நலத்திட்ட உதவிகள்

சங்கரன்கோவில் வியாபாரிகளின் வாழ்வாதாரம் காக்க கேரள முதல்வரிடம் மனு

SCROLL FOR NEXT