கோப்புப் படம் 
தமிழ்நாடு

விழுப்புரம் - காட்பாடி ரயில்கள் ரத்து!

பராமரிப்புப் பணிகள் காரணமாக விழுப்புரம் - காட்பாடி பயணிகள் ரயில் இரு நாள்களுக்கு பகுதியளவில் ரத்து

DIN

வேலூர் மாவட்டம், காட்பாடி ரயில் நிலைய பராமரிப்புப் பணிகள் காரணமாக, விழுப்புரம் - காட்பாடி பயணிகள் ரயில் இரு நாள்களுக்கு பகுதியளவில் ரத்து செய்யப்படுவதாக இன்று (ஏப். 8) அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்ட மக்கள் தொடர்பு அலுவலகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

வேலூர் மாவட்டம், காட்பாடி ரயில் நிலைய யார்டில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. இதன் காரணமாக ரயில்களின் போக்குவரத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

விழுப்புரம் ரயில் நிலையத்திலிருந்து ஏப்ரல் 9,11 ஆகிய தேதிகளில் (புதன், வெள்ளிக் கிழமைகள்) இரவு 7.10 மணிக்குப் புறப்படும் விழுப்புரம் - காட்பாடி பயணிகள் ரயில் (வ.எண். 66026), வேலூர் கண்டோன்மென்ட் - காட்பாடி இடையே பகுதியளவில் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதனால் இந்த ரயில் விழுப்புரத்திலிருந்து வேலூர் கண்டோன்மென்ட் வரை இயக்கப்படும்.

சென்னை எழும்பூரிலிருந்து மாலை 6 மணிக்குப் புறப்படும் சென்னை கடற்கரை - திருவண்ணாமலை பயணிகள் ரயில் (வ.எண். 66033) ஏப்ரல் 9, 11 ஆகிய தேதிகளிலும், திருவண்ணாமலையிலிருந்து காலை 4.30 மணிக்குப் புறப்படும் திருவண்ணாமலை - தாம்பரம் பயணிகள் ரயில் (வ.எண். 66034) ஏப்ரல் 10,12 ஆகிய தேதிகளிலும் முழுமையாக ரத்து செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க | லேப்டாப் தயாரிப்பில் களமிறங்கும் செல்போன் நிறுவனம்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜோஹோ மின்னஞ்சலுக்கு மாறிய அமித் ஷா!

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை, 27 மாவட்டங்களில் மழை!

பெற்றோர் இல்லாத வாழ்வு கொடூரமானது: பிக் பாஸில் நந்தினி உருக்கம்!

செல்லாண்டியம்மன் கோயில் புரட்டாசித் திருவிழா

கூடலழகா் பெருமாள் கோயில் கருட சேவை

SCROLL FOR NEXT