சாலை விபத்தில் தந்தை, மகன், மகள் பலி! 
தமிழ்நாடு

சாலையில் கவிழ்ந்த லாரிக்கு அடியில் சிக்கிய தந்தை, மகன், மகள் பலி!

நன்னிலம் அருகே சாலையில் கவிழ்ந்த லாரிக்கு அடியில் சிக்கிய தந்தை, மகன், மகள் பலி!

DIN

திருவாரூர்: திருவாருர் மாவட்டம் நன்னிலம் அருகே அதிவேகமாக வந்த லாரி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானபோது, லாரிக்கு அடியில் சிக்கி சிறுவர்கள் உள்பட 3 பேர் பலியாகினர்.

சாலையோரமாகச் சென்று கொண்டிருந்த இரு சக்கர வாகனத்தின் மீது லாரி கவிழ்ந்ததில் தந்தை, மகன் மற்றும் மகள் சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வீட்டு சமையலுக்காக மிளகாய்த்தூள் அரைத்து விட்டு வீடு திரும்பிக் கொண்டு இருந்த போது இந்த கோர விபத்து நேரிட்டதாகக் கூறப்படுகிறது.

முதற்கட்ட விசாரணையில், ஜல்லி ஏற்றிக்கொண்டு அதிவேகமாக வந்த லாரி, சாலை வளைவில் திரும்பும்போது கட்டுப்பாட்டை இழந்ததால் விபத்து நேரிட்டதாகக் கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆத்தூா் அருகே இருசக்கர வாகனம் மீது காா் மோதியதில் இருவா் உயிரிழப்பு

ஆத்தூரில் கருமாரியம்மன் கோயில் தேரோட்டம்

மேட்டூா் அணை உபரிநீா் கால்வாயில் அழுகிய மீன்களை அகற்றும் பணி

இலங்கைக் கடற்படையினரால் நம்புதாளை மீனவா்கள் 4 போ் கைது

பெண்ணை வாளால் வெட்டிய இருவா் கைது

SCROLL FOR NEXT