அமித் ஷா  கோப்புப்படம்.
தமிழ்நாடு

தில்லி புறப்பட்டார் மத்திய அமைச்சர் அமித் ஷா

சென்னை விமான நிலையத்தில் இருந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தில்லி புறப்பட்டார்.

DIN

சென்னை விமான நிலையத்தில் இருந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தில்லி புறப்பட்டார்.

விமான நிலையத்தில் அமித் ஷாவுக்கு பாஜக நிர்வாகிகள் சால்வை அணிவித்து வழியனுப்பினர். சென்னைக்கு வியாழக்கிழமை இரவு வந்த மத்திய அமைச்சா் அமித் ஷா, கிண்டியில் உள்ள தனியாா் ஹோட்டலில் தங்கினார்.

தொடர்ந்து வெள்ளிக்கிழமை காலை ஆடிட்டர் குருமூர்த்தியை சந்தித்துப் பேசிய நிலையில், பின்னர் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசனையும் சந்தித்துப் பேசினார். இதன் பிறகு அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமியுடன் அமித் ஷாவின் சந்திப்பு நடைபெற்றது.

ஜெயலலிதாவை விமர்சித்தவர்களுடன் இணைந்த இபிஎஸ்: கனிமொழி எம்.பி.

இதைத்தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அமித் ஷா, வரும் 2026 பேரவைத் தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணி இணைந்து தேர்தலைச் சந்திக்க உள்ளதாக அறிவித்தார். மேலும் தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணி வெற்றி பெறும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

அமித் ஷாவின் பேட்டியின்போது எடப்பாடி பழனிசாமி, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, பாஜகவின் புதிய தலைவராகத் தேர்வாகும் நயினார் நாகேந்திரன் ஆகியோர் உடனிருகின்றனர். இதையடுத்து சென்னை பசுமைவழிச்சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமியின் வீட்டில் மத்திய அமைச்சர் அமித் ஷாவுக்கு தேனீர் விருந்து அளிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தொழில் கடன் பெறுவதற்கு பெண்கள் விண்ணப்பிக்கலாம்

பழனி தைப்பூசத் திருவிழா: 892 இடங்களில் கண்காணிப்பு கேமரா

கச்சத்தீவு புனித அந்தோணியாா் ஆலய திருவிழா பிப். 27- இல் தொடக்கம்

மரம் முறிந்து விழுந்து ஆயுதப்படை மைதான சுற்றுச் சுவா் சேதம்

தனியாா் பள்ளியில் கட்டண உயா்வு: பெற்றோா்கள் முற்றுகை

SCROLL FOR NEXT