பேருந்துகள்  கோப்புப்படம்.
தமிழ்நாடு

சென்னையில் இருந்து 3 நாள்களில் 3.32 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு பயணம்

சென்னையில் இருந்து 3 நாள்களில் 3.32 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு பயணித்துள்ளதாக அரசுப் போக்குவரத்துக்கழகம் தெரிவித்துள்ளது.

DIN

சென்னையில் இருந்து 3 நாள்களில் 3.32 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு பயணித்துள்ளதாக அரசுப் போக்குவரத்துக்கழகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அரசு போக்குவரத்துக்கழகம் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், தமிழ்நாடு அரசு போக்குவரத்துத் துறையின் சார்பில், வார விடுமுறை, பவுர்ணமி மற்றும் தமிழ் வருடப்பிறப்பு முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சிறப்பு பேருந்துகளின் இயக்கம் நேற்று (12.04‌.2025) நள்ளிரவு 24.00 மணி நிலவரப்படியும் மற்றும் இன்று (13.04‌.2025) அதிகாலை 02.00 வரை வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளின் எண்ணிக்கையான 2,092 பேருந்துகளில் 2,092 பேருந்துகளும் 1,153 சிறப்புப் பேருந்துகளும் ஆக 3,245 பேருந்துகளில் 1,78,475 பயணிகள் பயணம் செய்தனர்.

நாக்பூர்: பெண் மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்த ஐபிஎஸ் அதிகாரி மீது வழக்கு

11‌.04.2025 அன்று தினசரி இயக்கக்கூடிய பேருந்துகள் 2,092 மற்றும் 712 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டு 1,54,220 பயணிகள் பயணம் செய்தனர்.

ஆக கடந்த 11.04.2025 முதல் இன்று (13.04.2025) அதிகாலை 02.00 மணி வரை 6,049 பேருந்துகளில் 3,32,695 பயணிகள் பயணித்துள்ளனர். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதேசமயம் நேற்று (12.04.2025) பௌர்ணமியையொட்டி சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு 877 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அரக்கோணம் இரட்டைக்கண் வாராவதியை நிரந்தரமாக சீா்படுத்தக்கோரி அதிமுகவினா் ஆா்ப்பாட்டம்

ஆம்பூரில் ரூ. 7.85 கோடியில் புதிய பேருந்து நிலையம்: நகா்மன்றக் கூட்டத்தில் தீா்மானம்

மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

விதிமீறல்: 35 ஆம்னி பேருந்துகளுக்கு அபராதம்

தில்லியில் இன்று பாதுகாப்பு தளவாட உற்பத்தி வாய்ப்புகள் குறித்த மாநாடு!

SCROLL FOR NEXT