தமிழகத்தில் மீன்பிடி தடைக்காலம் தொடக்கம்!
தமிழகத்தில் மீன்பிடி தடைக்காலம் தொடர்பாக...
ராமேஸ்வரம்: தமிழகத்தில் மீன்பிடி தடைக்காலம் தொடங்கியுள்ளது.
இதனால், ராமநாதபுரம் மாவட்டத்தில் 1,650 க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் அந்தந்த துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. தடைக்காலத்தின்போது இந்திய - இலங்கை மீனவர்கள் பேச்சுவார்த்தையை மத்திய அரசு தொடங்கி தீர்வுகான வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழகத்தில் மீன் இனப்பெருக்க காலமாகக் கருத்தப்படும் ஏப்ரல் 15 முதல் ஜூன் 15 வரை 61 நாள்கள் விசைப்படகுகள் மீன்பிடிக்க செல்லத் தடையானது அமலில் இருந்து வருகிறது.
Advertisement
Advertisement
இந்த நிலையில், இன்று தடைக்காலம் தொடங்கி உள்ளது. இதனால், ராமநாதபுரம் மாவட்டத்தில் பெரிய துறைமுகமான ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம் மற்றும் கீழக்கரை, ஏர்வாடி, தொண்டி, சோளியகுடி உள்ளிட்ட துறைமுகங்களில் 1,650க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் அந்தந்த துறைமுகங்களில் நிறுத்தப்பட்டுள்ளது.
இதில், ராமேஸ்வரம் துறைமுகத்தில் 600க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் துறைமுகத்தில் பாதுகாப்புடன் நிறுத்தும் பணியில் மீனவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தத் தடைக்காலம், ஜூன் 15 ஆம் தேதி வரை உள்ள நிலையில் இந்திய - இலங்கை மீனவர்கள் பேச்சுவார்த்தையை தொடங்கி இரு நாட்டு மீனவர்கள் பரஸ்பரத்துடன் மீன்பிடி தொழிலில் ஈடுபடவும், இலங்கை சிறையில் உள்ள மீனவர்கள் மற்றும் பறிமுதல் செய்யப்பட்டுள்ள படகுகளை விடுவிக்கவும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிக்க: தங்கம் விலை நிலவரம்: பவுனுக்கு ரூ.70,000-க்கும் கீழ் குறைந்தது!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.