பொன்முடி, நயினார் நாகேந்திரன் 
தமிழ்நாடு

ஆளுநரை சந்திக்கிறார் நயினார் நாகேந்திரன்!

தமிழக ஆளுநர் - நயினார் நாகேந்திரன் சந்திப்பு தொடர்பாக....

DIN

தமிழக ஆளுநர் ஆர். என். ரவியை மாநில பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் சந்திக்கவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வனத்துறை அமைச்சர் பொன்முடியை அமைச்சரவையில் இருந்து நீக்கக் கோரி ஆளுநர் ஆர். என். ரவியை தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், பேரவை உறுப்பினர் வானதி ஸ்ரீனிவாசன் உள்ளிட்டோர் சந்திக்கவுள்ளனர்.

ஆளுநரை சந்தித்து அமைச்சர் பொன்முடியை அமைச்சரவையில் இருந்து நீக்கக் கோரி மனு அளிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது.

முன்னதாக, தந்தை பெரியாா் திராவிடர் கழகம் சார்பில் திருவாரூர் கே. தங்கராசு நூற்றாண்டு விழா சென்னையில் கடந்த 6-ஆம் தேதி நடைபெற்றது. அதில் பங்கேற்ற அமைச்சர் பொன்முடி, பெண்களை இழிவுபடுத்தும் வகையில் சில கருத்துகளைப் பேசினார்.

இந்த விடியோ இணையத்தில் வேகமாக பகிரப்பட்டு எதிர்கருத்துகள் பதிவாகின. பொன்முடியின் பேச்சுக்கு திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் கனிமொழியும் கண்டனம் தெரிவித்திருந்தார். பல்வேறு கட்சிகளின் தலைவர்களும் கண்டனம் தெரிவித்தனர்.

இந்த நிலையில், தமிழக ஆளுநரை மாநில பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் சந்திக்கவுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிக்க: குழந்தை கடத்தல்காரர்களுக்கு பிணை: அலகாபாத் உயர் நீதிமன்றத்துக்கு உச்ச நீதிமன்றம் கண்டிப்பு!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தீக்கிரையாகும் வங்கதேசம்!

தங்கம், வெள்ளி குறைவு! இன்றைய நிலவரம்..!

திருப்பரங்குன்றம் விவகாரம் மதப் பிரச்னை அல்ல; அது ஈகோ பிரச்னை: தமிழிசை பேட்டி

சென்னையில் கடும் பனி! ரயில்கள் தாமதம்; விமானங்கள் ரத்து!

நாமக்கல் ஆஞ்சனேயருக்கு 1,00,008 வடைமாலை அலங்காரம்: திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்

SCROLL FOR NEXT