மெரினா கடற்கரை கோப்புப் படம்
தமிழ்நாடு

இனி, மெரினாவுக்குச் செல்ல கட்டணமா?

மெரினா கடற்கரைக்குச் செல்ல கட்டணம் அவசியமா? என்பது குறித்து ஆணையர் விளக்கம்...

DIN

 மெரீனா கடற்கரைக்குச் செல்ல கட்டணம் வசூலிக்கப்படும் என்று செய்திகள் பரவிய நிலையில், இதுகுறித்து சென்னை மாநகராட்சி ஆணையா் குமரகுருபரன் விளக்கம் அளித்துள்ளாா்.

மக்கள் அதிக அளவில் கூடும் புகழ்பெற்ற இடங்களுக்கு சுற்றுச்சூழல் அங்கீகாரமான (புளூ லேபிள்) நீலக்கொடி வழங்கப்படும். அந்த வகையில், மே மாத இறுதிக்குள் உலகளாவிய சுற்றுச்சூழல் நீலக்கொடி சான்றிதழ் மெரீனாவுக்கு வழங்கப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது. இதற்காக நீலக்கொடி கடற்கரை திட்டத்தின்கீழ், 6 கோடி மதிப்பில் கடற்கரையை மேம்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

இந்த மேம்பாட்டுப் பணிகள் நிறைவடைந்த பிறகு, மெரீனா கடற்கரைக்குச் செல்ல பொதுமக்களிடம் கட்டணம் வசூலிக்கப்படும் என சில ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.

இதுகுறித்து சென்னை மாநகராட்சி ஆணையா் குமரகுருபரன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

மெரீனா நீலக்கொடி கடற்கரை திட்டத்தில் கட்டணம் வசூலிக்கப்படும் என வெளியான தகவல் தவறானது. மெரீனா கடற்கரையை இயற்கையான சூழலில் பொதுமக்கள் பயன்படுத்தவே நீலக்கொடி கடற்கரைத் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. பராமரிப்புக்காக மக்களிடம் கட்டணம் வசூலிக்கப்படும் என்று பரவும் செய்தி உண்மை அல்ல என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேகம்... ரித்திகா நாயக்!

திஷா பதானியின் வீட்டிற்கு வெளியே துப்பாக்கிச் சூடு! குற்றவாளிகள் சுட்டுக்கொலை!

அமெரிக்க வரி விதிப்பால் ஆட்டோமொபைல் உதிரிபாக உற்பத்தி 8% பாதிப்பு!

பில் சால்ட் அதிரடி: டி20 தொடரை வெற்றியுடன் தொடங்கிய இங்கிலாந்து!

அன்பே வலிமையின் ஆதாரம்: வாழ்த்துகளுக்கு நன்றி கூறிய பிரதமர்!

SCROLL FOR NEXT