ஜகதீப் தன்கர் ANI
தமிழ்நாடு

அரசியலமைப்புதான் உயர்ந்தது: குடியரசுத் துணைத் தலைவருக்கு திமுக கண்டனம்!

குடியரசுத் துணைத் தலைவருக்கு திமுக கண்டனம் தெரிவித்திருப்பது பற்றி...

DIN

குடியரசுத் தலைவர் ஜகதீப் தன்கருக்கு திமுக தரப்பில் அக்கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா கண்டனம் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 10 மசோதாக்களுக்கு ஆளுநா் ஆா்.என். ரவி ஒப்புதல் வழங்காமல் தாமதப்படுத்தியதாக சா்ச்சை எழுந்தது. இந்த விவகாரம் தொடா்பாக தமிழக அரசு தொடா்ந்த வழக்கில் அண்மையில் தீா்ப்பளித்த உச்சநீதிமன்றம், மசோதாக்கள் மீது முடிவெடுக்க குடியரசுத் தலைவா் மற்றும் ஆளுநருக்கு காலக்கெடு நிா்ணயித்தது.

இந்தச் சூழலில், தில்லியில் வியாழக்கிழமை நடைபெற்ற மாநிலங்களவை பயிற்சித் திட்ட நிகழ்ச்சியில் குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கா் பங்கேற்றாா்.

அப்போது, ‘குடியரசுத் தலைவருக்கு நீதிமன்றம் உத்தரவிட முடியாது’ எனக் குறிப்பிட்ட அவா், ‘நாடாளுமன்றத்தைவிட மேலானதாக நீதிமன்றம் செயல்படுவதாக’ சாடினாா்.

ஜகதீப் தன்கரின் பேச்சு விமர்சனத்துக்குள்ளான நிலையில், அவருக்கு எதிராக எதிர்க்கட்சித் தலைவர்கள் தங்களின் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், ஜகதீப் தன்கருக்கு கண்டனம் தெரிவித்து திமுகவின் துணைப் பொதுச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான திருச்சி சிவா வெள்ளிக்கிழமை காலை அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில், ”அரசியலமைப்பின் அடிப்படையில் பிரிக்கப்பட்ட அதிகாரங்களின் படி நிர்வாகம், சட்டமன்றம்/ நாடாளுமன்றம் மற்றும் நீதித்துறை ஆகியவை தனித்தனி அதிகாரங்களைக் கொண்டுள்ளன. இதன் அடிப்படையில் இம்மூன்று துறைகளும் அவரவர் துறைகளில் இயங்கினாலும் அரசியலமைப்பு தான் அனைத்தையும் விட உயர்ந்தது என்பதை ஒருவர் மறந்துவிடக் கூடாது. 

ஆளுநர்கள் மற்றும் குடியரசுத் தலைவர்களின் பங்கு என்ன என்பது குறித்து உச்சநீதிமன்றம் அரசியலமைப்பு சட்ட பிரிவு 142 ஐ பயன்படுத்தி சமீபத்தில் தெளிவுபடுத்தி உள்ளது. அதில் அரசியலமைப்பு அதிகாரம் என்ற பெயரில் எந்தவொரு தனிநபரும் சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை காலவரையின்றி நிறுத்தி வைக்க முடியாது என்பதை சந்தேகத்திற்கு இடமின்றி நிறுவியுள்ளது.

இந்த உச்ச நீதிமன்றத் தீர்ப்பு குறித்த துணைக்குடியரசுத் தலைவர் ஜகதீப் தங்கரின் கருத்துகள் நெறிமுறையற்றவை. இந்தியாவில் "சட்டத்தின் ஆட்சி" தான் நடக்கிறது என்பதை ஒவ்வொரு குடிமகனும் அறிந்திருக்க வேண்டும்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வங்கதேச முன்னாள் பிரதமர் கலீதா ஜியா மருத்துவமனையில் அனுமதி!

முத்தரப்பு டி20 தொடர்: பாகிஸ்தானுக்கு 185 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இலங்கை!

எஸ்ஐஆர் படிவம்! முழுமையாக பூர்த்தி செய்யாவிட்டாலும் நிராகரிக்கப்படாது: அர்ச்சனா பட்நாயக்

பிரதீப் ரங்கநாதனின் எல்ஐகே புதிய பாடல்!

முதல் டி20: ஹாரி டெக்டார் அரைசதம் விளாசல்; வங்கதேசத்துக்கு 182 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT