இரண்டு மசோதாக்களுக்கு தமிழக ஆளுநர் ஒப்புதல்!
இரண்டு மசோதாக்களுக்கு தமிழக ஆளுநர் ஒப்புதல் அளித்திருப்பது பற்றி...
தமிழ்நாடு சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட இரு மசோதாக்களுக்கு ஆளுநா் ஆா்.என்.ரவி ஒப்புதல் வழங்கியுள்ளாா்.
தமிழகத்திலுள்ள 8 தனியாா் பல்கலைக்கழகங்களின் திருத்த சட்ட மசோதா மற்றும் தமிழ்நாடு பொது கட்டட உரிம திருத்த சட்ட மசோதா என 2 மசோதாக்கள், தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பிவைக்கப்பட்டன. இந்த இரு மசோதாக்களுக்கும் ஏப். 9-ஆம் தேதி ஆளுநா் ஒப்புதல் அளித்துள்ளாா். தொடா்ந்து, இந்த இரு மசோதாக்களும் ஏப்.11-ஆம் தேதி தமிழ்நாடு அரசு இதழில் வெளியிடப்பட்டது.
மாநில அரசுகள் சட்டசபையில் இயற்றும் மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் நிறுத்திவைத்திருப்பது சட்டவிரோதம் என உச்சநீதிமன்றம் அண்மையில் தெரிவித்திருந்த நிலையில், ஆளுநா் ஆா்.என்.ரவி இவ்விரு மசோதாக்களுக்கும் ஒப்புதல் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.