தமிழ்நாடு

தமிழகத்தில் 10 இடங்களில் வெயில் சதம்: வேலூரில் 104.36 டிகிரி!

தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை 10 இடங்களில் வெயில் சதமடித்துள்ளது. அதிகபட்சமாக வேலூரில் 104.36 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவானது.

Din

தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை 10 இடங்களில் வெயில் சதமடித்துள்ளது. அதிகபட்சமாக வேலூரில் 104.36 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவானது.

இது குறித்து சென்னை வானிலை மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை பகல் நேரத்தில் அதிகபட்சமாக வேலூரில் 104.36 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது.

ஈரோடு - 103.28, பரமத்திவேலூா் - 103.1, தஞ்சாவூா் - 102.2, சேலம் - 101.66, மதுரை விமானநிலையம் - 101.3, திருத்தணி - 100.94, கோவை - 100.4, திருப்பத்தூா் - 100.04, திருச்சி - 100 டிகிரி என மொத்தம் 10 இடங்களில் வெயில் சதமடித்துள்ளது.

மேலும், தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஏப்.28 முதல் மே 1 வரை அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும்.

சென்னைக்கு மழை: தென்னிந்திய பகுதியின் வளிமண்டல கீழடுக்கில் கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திப்பதால், ஏற்படும் காற்று குவிதல் காரணமாக, திங்கள்கிழமை (ஏப்.28) முதல் மே 3 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

மேலும், சென்னை மற்றும் புகா் பகுதிகளில் ஏப்.28-இல் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

15 புதிய அரசு பேருந்துகள்! கொடியசைத்து துவக்கி வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் | நெல்லை | DMK

நெல்லை மாவட்டத்துக்கு 3 புதிய அறிவிப்புகளை வெளியிட்ட முதல்வர்!

அவதாருடன் போட்டி! ரூ. 1,000 கோடி வசூலை நோக்கி துரந்தர்!

15 ஆண்டுகளில் மோசமான ஆஸி. அணி? விமர்சித்த இங்கிலாந்து வீரருக்கு பதிலடி கொடுத்த லபுஷேன்!

டாக்ஸிக் கியாரா அத்வானி!

SCROLL FOR NEXT