பஹல்காம் தாக்குதல் PTI
தமிழ்நாடு

பாகிஸ்தானை தூண்டிவிடும் சீனா: மதுரை ஆதீனம்

பஹல்காம் தாக்குதலுக்கு மதுரை ஆதீனம் கண்டனம்

DIN

பஹல்காம் தாக்குதலுக்கு மதுரை ஆதீனம் கண்டனம் தெரிவித்துள்ளார்.

பஹல்காம் தாக்குதலைக் கண்டித்து, மதுரை ஆதீனம் ஹரிஹர ஞானசம்பந்த தேசிக சுவாமிகள் பேசியதாவது, பஹல்காமில் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய பயங்கர தாக்குதலில் 27 பேர் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடி கொடுக்கும்வகையில், பாகிஸ்தானுடனான தொடர்பை மற்றைய நாடுகளும் தவிர்க்க வேண்டும். பாகிஸ்தானை தனிமைப்படுத்த வேண்டும்.

பாகிஸ்தான் பயங்கரவாதிகளை ஆதரிக்கிறது. ஆனால், அதனைத் தூண்டி விடுவது சீனாதான். இந்த பயங்கரவாதத் தாக்குதல் விவகாரத்தில் அரசு தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. இந்தியா அளிக்கும் பதிலடியின் பின்னர் பாகிஸ்தான் இருக்குமா என்றுகூட தெரியவில்லை.

முன்னாள் பிரதமர் ஜவாஹர்லால் நேருவின் ஆட்சிக்காலத்தில் நாம் பல பகுதிகளை இழந்து விட்டோம். அதற்கெல்லாம் இந்த முறை சரியான பதிலடி கொடுக்கப்படும்.

மனிதாபிமானத்தின்படி, தண்ணீர் தருவதுதான் சரி; ஆனால், அந்நாட்டினருக்குத்தான் மனிதாபிமானமே இல்லையே. அவர்கள்தான் இந்தியர்களைச் சுட்டு வீழ்த்துகின்றனர். அந்தவகையில், பயங்கரவாதத்துக்கு எதிராக சிந்து நதி நீரை நிறுத்துவது சரியே. அவர்களுக்கு காற்றைக்கூட அனுமதிக்கக் கூடாது.

வாஜ்பாய் ஆட்சியின்போது அளிக்கப்பட்ட பதிலடியைப்போலவே, தற்போதும் பாகிஸ்தானுக்கு தக்க பதிலடியைத் தர வேண்டும்.

இந்தியா, எப்போதும் சமாதானத்தையும் அமைதியையும்தான் விரும்புகிறது. ஆனால், உறங்கிக் கொண்டிருக்கும் புலியைச் சீண்டினால் ஏற்படும் விளைவை பாகிஸ்தான் கண்டிப்பாக அனுபவித்துத்தான் ஆகவேண்டும்.

நல்லவர்களாக இருப்பதைவிட வல்லவர்களாக இருப்பதும் முக்கியம் என்று தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பருத்தி மீதான 11% இறக்குமதி வரி ரத்து! மத்திய அரசு

கரையைக் கடந்த புயல் சின்னம்!

பயணிகள் விமானத்தில் தீ! 36,000 அடி, 40 நிமிட பயணம்! பத்திரமாக தரையிறக்கியது எப்படி?

தெய்வ தரிசனம்... காணாமல் போன பொருள் கிடைக்க திருமுருகபூண்டி திருமுருகநாதஸ்வாமி!

தே.ஜ. கூட்டணி எம்பிக்கள் கூட்டம்: பிரதமர் மோடி, சி.பி. ராதாகிருஷ்ணன் பங்கேற்பு!

SCROLL FOR NEXT