இந்தியா - பாகிஸ்தான். 
கிரிக்கெட்

டி20 உலகக் கோப்பையில் விளையாடுவோம்; இந்தியாவுடன் இல்லை: பாகிஸ்தான் அரசு!

டி20 உலகக் கோப்பையில் விளையாடுவோம்; ஆனால், இந்தியாவுடன் விளையாட மாட்டோம் என பாகிஸ்தான் அரசு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளதைப் பற்றி...

இணையதளச் செய்திப் பிரிவு

டி20 உலகக் கோப்பையில் விளையாடுவோம்; ஆனால், இந்தியாவுடன் விளையாட மாட்டோம் என பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது.

இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறும் டி20 உலகக் கோப்பைத் தொடர் வருகிற பிப்ரவரி 7 ஆம் தேதி தொடங்கி மார்ச் 8 வரை நடைபெறவிருக்கிறது. மொத்தம் 20 அணிகள் பங்கேற்றுள்ள இந்தத் தொடரின் 4 குழுக்களாக அணிகள் பிரிக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் தில்லி, சென்னை உள்பட 5 இடங்களில் மொத்தமாக 55 போட்டிகள் நடைபெறுகின்றன.

குரூப் ஏ-வில் இந்தியா, அமெரிக்கா, நமீபியா, பாகிஸ்தான், நெதர்லாந்து ஆகிய அணிகளும், குரூப் பி-யில் ஆஸ்திரேலியா, இலங்கை, அயர்லாந்து, ஜிம்பாப்வே, ஓமன் ஆகிய அணிகளும், குரூப் சி-யில் இங்கிலாந்து, மேற்கிந்தியத் தீவுகள், ஸ்காட்லாந்து, இத்தாலி, நேபாளம் ஆகிய அணிகளும், குரூப் டி பிரிவில் தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து, ஐக்கிய அரபு அமீரகம், கனடா ஆகிய அணிகளும் இடம்பெற்றுள்ளன.

இந்தியா - வங்கதேசம் இடையேயான மோதல்போக்கு காரணமாக, தங்களுக்கான போட்டிகளை வேறு இடத்துக்கு மாற்ற வங்கதேச கிரிக்கெட் வாரியம் கோரிக்கை வைத்தது. ஆனால், வங்கதேசத்தின் கோரிக்கைகளை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் முற்றிலுமாக மறுத்ததால், டி20 உலகக் கோப்பைத் தொடரை வங்கதேச அணி புறக்கணித்தது. இதன் விளைவாக வங்கதேச அணிக்குப் பதிலாக ஸ்காட்லாந்து அணிக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

வங்கதேசத்துக்கு ஆதரவளிக்கும் விதமாக பாகிஸ்தான், வங்கதேச ஆகிய இரண்டு அணிகளுமே டி20 உலகக் கோப்பைத் தொடரைப் புறக்கணிக்கப் போவதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பகிரப்பட்டு வந்தன.

இந்த நிலையில், பிப்ரவரி 15 ஆம் தேதி கொழும்பில் நடைபெறும் இந்தியாவுக்கு எதிரான டி20 உலகக் கோப்பை போட்டியைப் புறக்கணிப்பதாக பாகிஸ்தான் அரசு இன்று (பிப்.1) தனது எக்ஸ் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இந்தப் போட்டியை புறக்கணிப்பது குறித்து பாகிஸ்தான் அரசு கருத்து தெரிவித்துள்ள நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியமோ, பாகிஸ்தான் உள்துறை அமைச்சரும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவருமான மோஷின் நக்வி தரப்பில் எந்தத் தகவலும் வெளியாகவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மார்பிலேயே சுடுவோம்: இயக்குநருக்கு பிஷ்னோய் கும்பல் வெளிப்படையாக கொலை மிரட்டல்

6 ஆண்டுகளுக்குப் பின்.. சீனாவின் ஷாங்காய்க்கு ஏர் இந்தியா நேரடி விமான சேவை!

மத்திய பட்ஜெட் 2026-27: நிர்மலா சீதாராமனின் 83 நிமிட முழு உரை

மத்திய பட்ஜெட் 2026-27: தமிழ்நாட்டிற்கு கிடைத்த திட்டங்கள் என்ன?

மத்திய பட்ஜெட் 2026: தனிநபர் வருமான வரி; இதை கவனித்தீர்களா?

SCROLL FOR NEXT