தமிழக வெற்றிக் கழகத் தலைவா் விஜய் கோப்புப் படம்
தமிழ்நாடு

விஜய் வருகை: தவெகவினர் மீது வழக்கு!

தவெகவினர் மீது வழக்குப் பதிவு தொடர்பாக...

DIN

கோவை விமான நிலையத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் வருகையின்போது மக்களை திரட்டி இடையூறு ஏற்படுத்தியதாக தவெக நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தவெக மாவட்டச் செயலாளர் சம்பத் உள்ளிட்டோர் மீது பீளமேடு காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. முன்னறிவிப்பு இல்லாமல் மக்களை திரட்டி விமான நிலையத்தில் பயணிகளுக்கு இடையூறு, பொருள்கள் சேதம் உள்ளிட்ட பிரிவுகளில் கீழ் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

மேலும், சாலையில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியதாகவும் தவெக தொண்டர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் பூத் கமிட்டி நிர்வாகிகள் கருத்தரங்கு கோவையில் நேற்று(ஏப். 26) நடைபெற்றது. தவெக தலைவர் விஜய் பங்கேற்று வாக்குச்சாவடி முகவர்களுக்கு ஆலோசனையை வழங்கினார்.

தவெக தலைவர் விஜய் வருகையின்போது ஏராளமான தொண்டர்கள் கோவை விமான நிலையத்தில் குவிந்தனர்.

முன்னறிவிப்பு இல்லாமல் தொண்டர்கள் குவிந்ததால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

இதையும் படிக்க: கோடை மழை! இன்று 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 12 காசுகள் சரிந்து ரூ.87.68 ஆக நிறைவு!

ஊஊஊ... வடிவேலுவுடனான விடியோவை பகிர்ந்த பிரபு தேவா!

எந்தன் நெஞ்சில் நீங்காத... பாவனா!

உன்னோடு நானும்... ஜெனிலியா!

முதல் சுற்றிலேயே தோல்வி: விரக்தியால் டென்னிஸ் ராக்கெட்டை உடைத்த மெத்வதேவ்!

SCROLL FOR NEXT