சொத்துக் குவிப்பு வழக்கில் அமைச்சர் ஐ. பெரியசாமியை விடுவித்த திண்டுக்கல் நீதிமன்றத்தின் உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
மேலும், அடுத்த 6 மாதங்களின் விசாரணையை முடிக்க வேண்டும் என்று தமிழக லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
2006 - 2010 வரை அமைச்சராக இருந்த காலத்தில் வருமானத்துக்கு அதிகமாக சொத்துக் குவித்ததாக அமைச்சர் ஐ. பெரியசாமி, அவரது மனைவி மற்றும் மகன்கள் மீது வழக்குத் தொடரப்பட்டிருந்தது.
இந்த வழக்கை விசாரித்த திண்டுக்கல் மாவட்ட நீதிமன்றம், அமைச்சர் ஐ. பெரியசாமி மற்றும் அவரது குடும்பத்தினரை விடுவித்து உத்தரவிட்டிருந்தது.
இந்த உத்தரவுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிபதி வேல்முருகன், திண்டுக்கல் நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்துள்ளார்.
மேலும், அடுத்த 6 மாதங்களின் விசாரணையை முடிக்க வேண்டும் என்று தமிழக லஞ்ச ஒழிப்புத்துறைக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
ஏற்கெனவே, அமைச்சர் துரைமுருகனுக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கில் வேலூர் நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்றம் மறுவிசாரணைக்கு உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.