பத்ம விருதளிக்கும் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு 
தமிழ்நாடு

பத்ம விருதுகள் விழாவில் பங்கேற்ற பிரபலங்கள்!

அஜித் குமார், ரவிச்சந்திரன் அஸ்வின், தாமு, ராதாகிருஷ்ணன் தேவசேனாதிபதி உள்ளிட்டோர் விருதுகளைப் பெற்றுக்கொண்டனர்.

DIN

தில்லியில் பத்ம விருதுகள் வழங்கும் விழாவில் தமிழகத்தைச் சேர்ந்த அஜித் குமார், ரவிச்சந்திரன் அஸ்வின், தாமு, ராதாகிருஷ்ணன் தேவசேனாதிபதி உள்ளிட்டோர் விருதுகளைப் பெற்றுக்கொண்டனர்.

இதில் நடிகர் அஜித் குமார், நல்லி குப்புசாமி, ஷோபனா ஆகியோருக்கு பத்ம பூஷண் விருது வழங்கப்பட்டது.

ஒவ்வோர் ஆண்டும் குடியரசு தின விழா நிகழ்வின்போது பத்ம விருதுகள் அறிவிக்கப்படும் நிலையில், 2025-ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் அறிவிப்பை மத்திய அரசு ஜன. 25ஆம் தேதி வெளியிட்டது.

சமூகப் பணி, பொது விவகாரம், அறிவியல் மற்றும் பொறியியல் துறை, மருத்துவம், இலக்கியம், கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்த பங்களிப்பை அளித்தவர்களுக்கு பத்ம விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன

இந்த ஆண்டில் 7 பேருக்கு பத்ம விபூஷண் விருதும், 19 பேருக்கு பத்ம பூஷண் விருதும், 113 பேருக்கு பத்மஸ்ரீ விருதும் வழங்கப்பட்டது.

தமிழகத்தைச் சேர்ந்த 13 பேருக்கு பத்ம விருதுகள் வழங்கப்பட்டன.

தமிழகத்தில் 3 பேருக்கு பத்ம பூஷண்

தமிழகத்தில் நடிகா் அஜித் குமாா், நடிகை ஷோபனா, நல்லி குப்புசாமி செட்டி ஆகிய மூவருக்கு பத்ம பூஷண் விருது வழங்கப்பட்டது.

தமிழகத்தைச் சேர்ந்த 10 பேருக்கு பத்ம ஸ்ரீ விருது

குருவாயூர் துரை (கலை)

கே.தாமோதரன் (சமையல் கலை)

லட்சுமிபதி ராமசுப்பையர் (இலக்கியம் - கல்வி - இதழியல்)

எம்.டி.ஸ்ரீனிவாஸ் (அறிவியல் - பொறியியல்)

புரசை கண்ணப்ப சம்பந்தன் (கலை)

ரவிச்சந்திரன் அஸ்வின் (விளையாட்டு - கிரிக்கெட்)

ஆர். ஜி. சந்திரமோகன் - (தொழில்துறை)

ராதாகிருஷ்ணன் தேவசேனாதிபதி (கலை)

ஸ்ரீனி விஸ்வநாதன் (இலக்கியம் - கல்வி)

வேலு ஆசான் (கலை, பறை இசை)

இதேபோன்று தொழில் துறையில் குஜராத்தைச் சேர்ந்த பங்கஜ் பட்டேல், கலைத் துறையில் மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த சேகர் கபூர், கர்நாடகத்தைச் சேர்ந்த இசைக் கலைஞர் லக்‌ஷ்மிநாராயணா சுப்ரமணியம் உள்ளிட்டோர் பத்ம பூஷண் விருதைப் பெற்றுக்கொண்டனர்.

கேரளத்தைச் சேர்ந்த ஹாக்கி வீரர் பி.ஆர். ஸ்ரீஜேஸுக்கு பத்ம பூஷண் விருது வழங்கப்பட்டது. ஆந்திரத்தைச் சேர்ந்த பாலகிருஷ்ணாவுக்கும் பத்ம பூஷண் விருது வழங்கப்பட்டது.

இசைத் துறையில் ரிக்கி கேஜ், அர்ஜித் சிங் உள்ளிட்டோருக்கும் பத்ம ஸ்ரீ வழங்கப்பட்டது.

கடந்த ஆண்டு உயிரிழந்த பங்கஜ் உத்தாஸுக்கு அவரின் மறைவுக்குப் பிறகு கெளவரம் வழங்கப்பட்டது. அவருக்கு அறிவிக்கப்பட்ட பத்ம பூஷண் விருதை அவரின் மனைவி பெற்றுக்கொண்டார்.

இதையும் படிக்க | பத்ம பூஷண் விருதைப் பெற்றார் அஜித் குமார்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜப்பானில்.. முன்னாள் சிறைக் கைதியின் கல்லறையில் மன்னிப்புக் கோரிய அதிகாரிகள்! ஏன் தெரியுமா?

சூரத்-துபை இண்டிகோ விமானம் அகமதாபாத்தில் அவசரமாக தரையிறக்கம்

வாக்காளர் அதிகார யாத்திரையில் மோடி குறித்து அவதூறு! பாஜக கண்டனம்

பால்யகால சகி... ரவீனா தாஹா!

ஆஸ்திரேலியாவில் இருந்து வெளியேறினார் ஈரான் தூதர்!

SCROLL FOR NEXT