தமிழ்நாடு

மதுரை மழலையர் பள்ளியில் தண்ணீர் தொட்டியில் விழுந்த குழந்தை உயிரிழப்பு!

தனியார் மழலையர் பள்ளியில் 3 வயது குழந்தை தண்ணீர் தொட்டியில் விழுந்து உயிரிழந்தது பற்றி...

DIN

மதுரை தனியார் மழலையர் பள்ளியில் 3 வயது குழந்தை தண்ணீர் தொட்டியில் விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை கே.கே. நகர் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் மழலையர் பள்ளியில் கோடைகால சிறப்பு வகுப்புக்குச் சென்ற 3 வயது குழந்தை ஆருத்ரா, பள்ளிக்கு பின்புறம் உள்ள பகுதியில் விளையாடிக்கொண்டிருந்தபோது அங்கு திறந்து வைக்கப்பட்டிருந்த 12 அடி ஆழம் கொண்ட தண்ணீர் தொட்டியில் விழுந்துள்ளார்.

சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் வந்து குழந்தையை மீட்டு மருத்துவமனையில் சேர்த்த நிலையில் சிகிச்சை பலனின்றி குழந்தை உயிரிழந்தார்.

இதுதொடர்பாக  காவல் துணை ஆணையர் அனிதா உள்ளிட்ட அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பள்ளியின் உரிமையாளர் திவ்யா என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும், பள்ளிக்கு நேரில் சென்று விசாரணை நடத்த மாவட்ட கல்வி அதிகாரிக்கு தனியார் பள்ளிகள் இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.

பள்ளி நிர்வாகத்தின் அலட்சியம் காரணமாகவே குழந்தை உயிரிழந்துள்ளதாக பெற்றோர் குற்றம்சாட்டியுள்ளனர். இந்த சம்பவம் பெற்றோர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெண் நூலகரிடம் ஆபாசமாக நடந்து கொண்டவா் கைது

ப்ரண்ட்ஸ் டிரெய்லர்!

துரந்தர் டிரெய்லர்!

கோவை வருகை: தமிழில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி!

தில்லியைப் போல தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் சதி? ஜம்மு-காஷ்மீரில் உஷார் நிலை!

SCROLL FOR NEXT