கடந்த ஏப். 19 அன்று புதுவை முதல்வா் என்.ரங்கசாமியின் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதையடுத்து, அங்கு சோதனையிட வந்த போலீஸாா். DNS
தமிழ்நாடு

புதுச்சேரி முதல்வர் வீட்டுக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்!

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியின் வீட்டுக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது பற்றி...

DIN

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியின் வீட்டுக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி திலாஸ்பேட்டையில் உள்ள முதல்வர் ரங்கசாமியின் வீட்டில் வெடிகுண்டு இருப்பதாக மின்னஞ்சல் மூலம் இன்று(செவ்வாய்க்கிழமை) தகவல் வந்துள்ளது. இதையடுத்து வெடிகுண்டு நிபுணர்கள் மோப்பநாய் உதவியுடன் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

அதேபோல பிரெஞ்சு தூதரகம், அப்பா பைத்தியசாமி கோயிலுக்கும் இன்று வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. அங்கும் சோதனை நடைபெற்று வருகிறது.

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியின் வீட்டுக்கு கடந்த ஏப். 19 ஆம் தேதியும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அன்றைய சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரிய வந்துள்ளது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

முன்னதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம், தீயணைப்புத் துறை அலுவலகம், ஜிப்மர் மருத்துவமனை, புதுச்சேரி கடற்கரை சாலையில் உள்ள சில ஹோட்டல்களுக்கும் வெடிகுண்டு மிரட்டல் வந்தது குறித்தும் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் 7,01,871 வாக்காளா்கள் நீக்கம்

ஓமந்தூராா் மருத்துவமனையில் 20,000 இதய இடையீட்டு சிகிச்சை: மருத்துவக் குழுவினருக்கு அமைச்சா் மா.சுப்பிரமணியன் பாராட்டு

முதல்வா் ஸ்டாலினின் கொளத்தூா் தொகுதியில் ஒரு லட்சம் போ் நீக்கம்

நீதி, துணிவுக்கான சமகால சான்று சென்னை உயா்நீதிமன்றம்: நீதிபதி எம்.எஸ்.ரமேஷ்

தடை விதிக்கப்பட்ட நாய்களை வளா்த்தால் ரூ.1 லட்சம் அபராதம்: சென்னை மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில் தீா்மானம்

SCROLL FOR NEXT