காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியுடன்  
தமிழ்நாடு

சாதிவாரிக் கணக்கெடுப்பு திமுகவுக்கும், இந்தியா கூட்டணிக்கும் கிடைத்த வெற்றி! - முதல்வர் ஸ்டாலின்

சாதிவாரிக் கணக்கெடுப்புக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது குறித்து முதல்வர் ஸ்டாலின் கருத்து..

DIN

சாதிவாரிக் கணக்கெடுப்பு திமுகவுக்கும், இந்தியா கூட்டணிக்கும் கிடைத்த மற்றுமொரு வெற்றி என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தில்லியில் பிரதமர் நரேந்திர மோடி இல்லத்தில், அவரின் தலைமையில் இன்று (ஏப். 30) அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இதில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், அமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இந்தக் கூட்டத்தில் சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்த பிரதமர் நரேந்திர மோடி ஒப்புதல் அளித்துள்ளதாக ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.

இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் தன்னுடைய எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்தப் பதிவில், “மிகவும் அவசியமான சாதிவாரிக் கணக்கெடுப்பை எடுக்க மறுத்து, தாமதப்படுத்தி வந்த மத்திய அரசின் அனைத்து முயற்சிகளும் தோல்வியடைந்ததையடுத்து வரும் மக்கள்தொகைக் கணக்கெடுப்புடன் சேர்த்து சாதிவாரிக் கணக்கெடுப்பு எடுக்கப்படும் எனத் தெரிவித்திருக்கிறது. ஆனால், முக்கிய கேள்விகளுக்கு எந்த பதிலும் அளிக்கவில்லை. அது எப்போது துவங்கும் எப்போது முடியும் என்று எதுவும் கூறவில்லை

பிகார் தேர்தலில் சமூக நீதி ஆதிக்கம் செலுத்தும் நிலையில், இந்த சாதிவாரிக் கணக்கெடுப்பு முக்கியமான அரசியல் தேவையை ஏற்படுத்தியிருக்கிறது.

எதிர்க்கட்சிகள் சாதியின் அடிப்படையில் மக்களை பல பிரிவுகளாகப் பிரிக்கின்றனர் எனக் குற்றம் சாட்டிய அதே பிரதமர் தற்போது எதிர்க்கட்சிகளில் கோரிக்கைக்கு அடிபணிந்துள்ளார்.

உண்மையான சமூக நீதி நோக்கத்திற்காக சாதிவாரிக் கணக்கெடுப்பு மிகவும் அவசியமானது. அநீதிக்கான அளவைப் புரிந்துகொள்ளாமல், அதை நாம் சரி செய்யமுடியாது. தமிழக அரசுக்கும், திமுகவுக்கும் கடின உழைப்பால் கிடைத்த வெற்றி.

சாதிவாரிக் கணக்கெடுப்புக் கோரி முதலில் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியவர்கள் நாங்கள். மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு, மத்திய அரசு பொறுப்பேற்க வேண்டும் எனக் கூறி பிரதமருடனான ஒவ்வொரு சந்திப்பிலும் வலியுறுத்தி வந்தோம். மற்ற மாநிலத்தினர் சாதிவாரிக் கணக்கெடுப்புக்கு வலியுத்தினாலும், நாங்கள் மக்கள் தொகைக் கணக்கெடுப்புக்கு தொடர்ந்து வலியுறுத்தினோம். இது மத்திய அரசு சார்ந்தது.

இது திமுகவுக்கும், இந்தியா கூட்டணிக்கும் கிடைத்த மற்றுமொரு வெற்றி” எனப் பதிவிட்டுள்ளார்.

இதையும் படிக்க: சாதிவாரிக் கணக்கெடுப்பு: காங்கிரஸ் கொள்கையை ஏற்றது பாஜக - ராகுல்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இஸ்ரேல் ராணுவத்தின் மூத்த வழக்கறிஞர் கைது!

ரூ. 16 லட்சம் மதிப்பிலான வீடு பரிசு! 10 மாதக் குழந்தைக்கு அடித்த ஜாக்பாட்!

ராமதாஸ் - அன்புமணி ஆதரவாளர்கள் கடும் மோதல்! உருட்டுக்கட்டைகளால் தாக்குதல்!

பொன்முடி, சாமிநாதன் திமுக துணைப் பொதுச் செயலாளர்கள்: மு.க. ஸ்டாலின்

தமிழ்நாட்டின் முறைசாரா பெண் தொழிலாளர்களின் போராட்டம்: வலுசேர்க்கும் தொழிற்சங்கம்!

SCROLL FOR NEXT