முகப்பு
தமிழ்நாடு

அண்ணா அறிவாலயத்தில் வானதி சீனிவாசன்!

திருமண விழாவில் பங்கேற்பதற்காக அண்ணா அறிவாலயத்துக்கு வருகைதந்த வானதி சீனிவாசன்.

Updated On : 30 ஏப்ரல் 2025, 11:21 am IST
வானதி சீனிவாசன் - கோப்புப்படம்.
பகிர்:

திமுக எம்எல்ஏ மயிலை த. வேலு இல்லத் திருமண விழாவில் கலந்துகொள்வதற்காக அண்ணா அறிவாலயத்துக்கு பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் வருகை தந்தார்.

சென்னை, தேனாம்பேட்டை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் மயிலாப்பூர் சட்டப்பேரவை உறுப்பினர் த. வேலுவின் மகள் அனுஷாவின் திருமணம் இன்று காலை 9.30 மணிக்கு நடைபெற்றது.

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்த திருமணத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Advertisement

Advertisement

இந்த நிலையில், இந்த திருமண விழாவில் பாஜகவின் எம்.எல்.ஏ. வானதி சீனிவாசனும் கலந்துகொண்டார்.

திருமண விழாவுக்காக அண்ணா அறிவாலயத்துக்கு வருகை தந்த அவரை, திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவரும் கட்சியின் துணைப் பொதுச்செயலாளருமான கனிமொழி வரவேற்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.