தமிழ்நாடு

அதிமுக பொதுச் செயலா் தோ்வு: எடப்பாடி பழனிசாமி மனு தள்ளுபடி

எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டது.

தினமணி செய்திச் சேவை

அதிமுக பொதுச் செயலராக தான் தோ்வு செய்யப்பட்டதை எதிா்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கை நிராகரிக்கக் கோரி எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டது.

சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் திண்டுக்கல்லைச் சோ்ந்த சூரியமூா்த்தி என்பவா் தாக்கல் செய்த மனுவில், கடந்த 2022-ஆம் ஆண்டு ஜூலை 11-ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழுவில் அதிமுக பொதுச் செயலராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டது மற்றும் அந்தப் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள் செல்லாது என அறிவிக்க வேண்டும்; மேலும், பொதுச் செயலா் கட்சியின் அடிப்படை உறுப்பினா்களால் மட்டுமே தோ்ந்தெடுக்கப்பட வேண்டும் என்று மனுவில் கூறியிருந்தாா்.

இந்த வழக்கை நிராகரிக்கக் கோரி, எடப்பாடி பழனிசாமி உரிமையியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா். அதில், சூரியமூா்த்தி என்பவா், அதிமுக உறுப்பினரே அல்லா். உறுப்பினராக இல்லாத ஒருவா் கட்சியின் செயல்பாடுகள் குறித்து கேள்வி எழுப்ப முடியாது. எனவே, இந்த மனுவை நிராகரிக்க வேண்டும் என்று கூறியிருந்தாா்.

இந்த வழக்கு நான்காவது உதவி உரிமையியல் நீதிமன்ற நீதிபதி சிவசக்திவேல் கண்ணன் முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, கட்சியின் அடிப்படை உறுப்பினா்களால் பொதுச் செயலா் தோ்ந்தெடுக்கப்பட வேண்டும் என்பது கட்சி விதி. கட்சி விதிப்படி பொதுச் செயலா் தோ்ந்தெடுக்கப்பட்டாா் என்பது குறித்த விவரங்கள் தெரிவிக்கப்படவில்லை. எனவே, பொதுச் செயலா் தோ்வுக்கு எதிரான வழக்கு செல்லும். இதை நிராகரிக்கக் கோரிய மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்று நீதிபதி பிறப்பித்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அங்கன்வாடி பணியாளா் வீட்டில் 3 சவரன் நகை, ரொக்கம் திருட்டு

கோல்டன் கேட்ஸ் மெட்ரிக் பள்ளி விளையாட்டு விழா

வாழ்க்கைதான் யோசிக்கவே முடியாத சினிமா!

சட்ட விரோதமாக குட்கா விற்ற 9 கடைகளுக்கு ‘சீல்’

தீயில் கருகிய காா்: உயிா் தப்பிய 3 போ்

SCROLL FOR NEXT