கும்மிடிப்பூண்டியில் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான வடமாநில இளைஞரை 4 நாள்கள் போலீஸார் பாதுகாவலில் விசாரணை செய்த பின் திருவள்ளூர் மாவட்ட போக்ஸோ நீதிமன்றமத்தில் வெள்ளிக்கிழமை ஆஜர்படுத்தினர்.
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கத்தைச் சேர்ந்த 10 வயது சிறுமி கடந்த மாதம் 12 ஆம் தேதி பள்ளி முடித்து வீட்டுக்குச் செல்லும்போது மர்ம நபரால் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு தப்பியோடினார்.
இந்த நிலையில், பாலியல் குற்றவாளி தேடப்பட்டு வந்த நிலையில் கடந்த மாதம் 25 ஆம் தேதி ஆந்திர மாநிலம் சூலூர்பேட்டை ரயில் நிலையத்தில் அமர்ந்திருந்த நபர் சந்தேகத்துக்குரிய நபரை போல இருந்ததால், தனிப்படையினர் அவரை விசாரித்தனர்.
அதில், ஆந்திர மாநிலம், சூலூர்பேட்டையில் இரவு உணவகத்தில் வேலைபார்த்த ஒடிஸா மாநிலத்தைச் சேர்ந்த ராஜூபிஷ்வர்மா (35) என்றும் அவரே குற்றவாளி என்பதும் தெரியவந்து அவரை கைது செய்தனர். அதைத்தொடர்ந்து தீவிர விசாரணைக்குப் பின், பூந்தமல்லி மகளிர் நீதிமன்றத்தில் கடந்த மாதம் 26 ஆம் தேதி ஆஜர்படுத்தியபின், ஆக. 9 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து, புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த நிலையில், ராஜூபிஷ்வர்மாவை 7 நாள்கள் காவலில் எடுத்து விசாரணை மேற்கொள்ள ஆரம்பாக்கம் காவல் நிலைய போலீஸார் திருவள்ளூர் போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த மாதம் 28 ஆம் தேதி மனு அளிக்கப்பட்டது. இந்த மனு மீது 29 ஆம் தேதி விசாரணை நடைபெற்றது.
அதைத் தொடர்ந்து பகல் 1 மணிக்கு பலத்த போலீஸார் பாதுகாப்புடன் ராஜூபிஷ்வர்மாவை அழைத்து வந்து போக்ஸோ நீதிமன்ற நீதிபதி உமாமகேஸ்வரி முன்பு ஆஜர்படுத்தினர். அதையடுத்து 4 மணி நேரத்திற்கு பின் விசாரணை செய்து 4 நாள்கள் போலீஸார் காவலில் எடுத்து விசாரணை செய்ய அனுமதி வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.
பின்னர் போலீஸார் பாதுகாப்புடன் சம்பவ நடந்த இடமான மாந்தோப்பு, வேலை செய்த இடம், சம்பவத்தில் ஈடுபட்ட பின்பு தங்கியிருந்த இடம் ஆகிய இடங்களுக்கு நேரில் அழைத்துச்சென்று போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
இதற்கிடையே விசாரணை முடிந்த நிலையில் வெள்ளிக்கிழமை திருவள்ளூர் மாவட்ட போக்ஸோ நீதிமன்ற நீதிபதி முன்பு ஆஜர்படுத்தினர். அதைத்தொடர்ந்து குற்றவாளியை பலத்த போலீஸார் பாதுகாப்புடன் அழைத்துச்சென்று புழல் சிறையில் அடைத்தனர்.
இதையும் படிக்க | சுதந்திர தின உரைக்கான யோசனைகளைப் பகிருங்கள்! - பிரதமர் மோடி அழைப்பு
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.