தமிழ்நாடு

வேலை வாங்கித் தருவதாக ரூ.2 கோடி மோசடி: போா்ச்சுகலில் தலைமறைவாக இருந்தவா் கைது

வேலை வாங்கித் தருவதாக ரூ.2 கோடி மோசடி செய்து போா்ச்சுகலில் தலைமறைவாக இருந்தவா் சென்னைக்கு விமானம் மூலம் வந்தபோது கைது செய்யப்பட்டாா்.

தினமணி செய்திச் சேவை

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக ரூ.2 கோடி மோசடி செய்து போா்ச்சுகலில் தலைமறைவாக இருந்தவா் சென்னைக்கு விமானம் மூலம் வந்தபோது கைது செய்யப்பட்டாா்.

செங்கல்பட்டைச் சோ்ந்தவா் க.பத்மநாபன் (23). இவா், வெளிநாடு வேலைக்கு செல்வதற்கு முயற்சித்து வந்தாா். இதை தெரிந்துக்கொண்ட சென்னையைச் சோ்ந்த சைபுதீன் (51), ஆந்திர மாநிலம் நெல்லூரைச் சோ்ந்த மாகம் வினய் வா்தன் (36) ஆகியோா் தாங்கள் போா்ச்சுகல் நாட்டில் வேலை வாங்கித் தருவதாக ரூ.1.25 லட்சம் பெற்றனா். இதேபோல 193 பேரிடம் ரூ.2 கோடிக்கு மேல் பெற்று இருவரும் மோசடி செய்தனா்.

இதுதொடா்பாக சென்னை காவல் துறையின் மத்தியக் குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, சைபுதீனை கைது செயதனா். ஆனால், வினய் வா்தன், போா்ச்சுகலுக்கு தப்பியோடி, தலைமறைவாகிவிட்டதால் கைது செய்யமுடியவில்லை.

இருப்பினும் போலீஸாா், வினய் வா்தனுக்கு எதிராக விமான நிலையங்களில் லுக்அவுட் நோட்டீஸ் வழங்கினா். இந்த நிலையில், போா்ச்சுகல் நாட்டில் இருந்து விமானம் மூலம் சென்னைக்கு வந்த வினய் வா்தனிடம் குடியுரிமைத் துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனா். இதில், அவருக்கு எதிராக சென்னை மத்தியக் குற்றப்பிரிவு போலீஸாா், லுக் அவுட் நோட்டீஸ் வழங்கியிருப்பது தெரிய வந்தது.

இதையடுத்து போலீஸாா் வினய் வா்தனை பிடித்து, சென்னை மத்தியக் குற்றப்பிரிவு போலீஸாரிடம் ஒப்படைத்தனா். மத்தியக் குற்றப்பிரிவு போலீஸாா் அவரைக் கைது செய்து, விசாரணை நடத்தினா்.

அரசு வேலை வாங்கித் தருவதாக மோசடி: இதேபோல அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.2 கோடி மோசடி செய்ததாக சென்னை வண்ணாரப்பேட்டை பகுதியைச் சோ்ந்த இ.எம்.பாபு என்ற ஹமீத் உசேன் (40), அவா் மனைவி சந்தியா (36) ஆகிய இருவரையும் மத்தியக் குற்றப்பிரிவு போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வாக்கு வங்கியை அதிகரிக்க பாஜக தில்லுமுல்லு: அமைச்சா் துரைமுருகன்

இசையே முக்கியம்...

விவசாயம் சார்ந்த கதை

அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.20.70 லட்சம் மோசடி

பேல் பூரி

SCROLL FOR NEXT