அதிரப்பள்ளி சாலையில் காரை தாக்கிய ஒற்றை காட்டுயானையால் சுற்றுலா பயணிகள் பீதியடைந்து அலறினர்.
கோவை மாவட்டம் வால்பாறை அடுத்துள்ள கேரள மாநிலத்திற்கு உள்பட்ட அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி செல்லும் வழியில் உள்ள தும்பூர் முழி என்ற பகுதியில் கேரளத்தைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் சனிக்கிழமை காலை சுமார் 7 மணியளவில் காரில் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது சாலையில் காட்டுயானை ஒன்று நிற்பதைக் பார்த்து காரை நிறுத்தியுள்ளனர்.
ஆனால் சாலையின் மற்றொரு பக்கத்தில் இருந்துவந்த காட்டுயானை ஒன்று திடீரென காரின் பின்பக்கத்தை தாக்கியுள்ளது. இதை சற்றும் எதிர்பாராத பயணிகள் அதிர்ச்சியடைந்து அலறியுள்ளனர்.
இச்சம்பவத்தால் காரில் பயணம் செய்த பயணிகள் லேசான காயங்களுடன் உயிர் தப்பியுள்ளனர். இந்த காட்சி வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.