தமிழகம் முழுவதும் பொதுமக்களுக்கு உயா் மருத்துவப் பரிசோதனைகளை வழங்கும் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் வெள்ளிக்கிழமை தொடக்கி வைத்தார்.
சென்னை சாந்தோமில் உள்ள செயின்ட் பீட்ஸ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளியில் திட்டத்தை தொடக்கிவைத்த முதல்வர், பரிசோதனைக்கு வருகை தந்திருக்கும் மக்களிடம் உரையாடினார்.
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் உள்ளிட்டோரும் நிகழ்வில் கலந்துகொண்டனர்.
சென்னையில் 15 மண்டலங்கள் உள்பட தமிழகம் முழுவதும் மொத்தம் 1,256 இடங்களில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ மருத்துவ முகாம்கள் நடைபெறுகின்றது.
முகாம் நடக்கும் இடத்தில் தொழில்நுட்ப மேம்பாட்டுடன் கூடிய நோய் கண்டறியும் கருவிகள் வைக்கப்பட்டுள்ளது. பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு மாலைக்குள் வாட்ஸ் ஆப் மூலம் முடிவுகள் தெரிவிக்கப்படும். சிகிச்சை தேவைப்படுவோருக்கு மருத்துவ சேவைகள் வழங்கப்படும்.
முகாமில் பெயா் பதிவு செய்பவா், பிற்காலங்களில் தமிழகத்தில் வேறு எந்த மருத்துவமனைக்கு சென்றாலும், அவரது உடல்நல விவரங்களைக் கண்டறியும் வசதியும் செய்யப்பட்டுள்ளது. நோய் வராமல் தடுக்க உணவு விழிப்புணா்வு அறிவுரைகள் வழங்கப்படும். முகாம்களில் உயா்சிறப்பு மருத்துவ நிபுணா்களும், 5 வகையான இந்திய மருத்துவ முறை நிபுணா்களும் இடம் பெறுவா்.
மற்ற துறைகளும் இந்த முகாமில் பங்கேற்பதால், மருத்துவக் காப்பீட்டு வசதிகள், மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டைகள் வழங்குதல் போன்ற கூடுதல் வசதிகளும் முகாமில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.