டிஐஜி வருண் குமாருக்கு எதிராக அவதூறு கருத்து தெரிவிக்க சீமானுக்கு இடைக் காலத் தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் தூண்டுதலின் பேரில், அவரது கட்சியினா் தன் மீதும், தனது குடும்பத்தினா் மீதும் சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துகளைப் பதிவிட்டு வருவதாக டி.ஐ.ஜி. வருண்குமாா் குற்றஞ்சாட்டினாா்.
இந்த நிலையில் தனக்கு எதிராக ஆதாரமில்லாத அவதூறு கருத்துகளை தெரிவிக்க சீமானுக்கு தடை விதிக்கக்க கோரியும், ரூ.2.10 கோடி மான நஷ்ட ஈடு வழங்க வேண்டும் எனவும் டி.ஐ.ஜி. வருண்குமாா் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இவ்வழக்கில் இன்று டிஐஜி வருண் குமாருக்கு எதிராக அவதூறு கருத்துகளை தெரிவிக்க சீமானுக்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதோடு மனுவிற்கு பதில் அளிக்க சீமானுக்கு உத்தரவிட்டு, விசாரணையை அடுத்த வாரம் ஒத்திவைத்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.