நெல்லையில் ஆணவக் கொலை செய்யப்பட்ட கவினின் தந்தைக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
வேறு சாதிப் பெண்ணை காதலித்ததற்காக தூத்துக்குடியைச் சேர்ந்த ஐடி ஊழியர் கவின் செல்வகணேஷ், நெல்லையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆணவக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த கொலையை செய்த பெண்ணின் சகோதரர் சுர்ஜித், பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் சரணடைந்த நிலையில் வன்கொடுமை தடுப்புச் சட்டம் மற்றும் குண்டர் சட்டத்தில் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
காவல் உதவி ஆய்வாளர்களான சுர்ஜித்தின் பெற்றோர் இரண்டாவது மற்றும் மூன்றாவது குற்றவாளிகளாக முதல் தகவல் அறிக்கையில் சேர்க்கப்பட்டு வழக்கின் விசாரணை காரணமாக அவர்கள் இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
தொடர்ந்து, கடந்த புதன்கிழமை கவின் கொலை வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்ட நிலையில், அன்றிரவே சுர்ஜித்தின் தந்தை சரவணன் கைது செய்யப்பட்டார்.
பேச்சுவார்த்தைக்குப் பிறகு கவினின் உடல் வெள்ளிக்கிழமை ஒப்படைக்கப்பட்டு அன்று உடல் தகனம் செய்யப்பட்டது.
இந்நிலையில் கவினின் தந்தை சந்திரசேகருக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
கவின் ஆணவக் கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவரது பெற்றோருக்கு பாதுகாப்பு இல்லை எனவும் அவர்களுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் பல்வேறு சமூக அமைப்பினர் அரசுக்கு கோரிக்கை விடுத்த நிலையில் தற்போது போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | தமிழக மக்களின் உரிமை பறிபோகும் சூழல்! - ப. சிதம்பரம்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.