தமிழிசை சௌந்தரராஜன் ENS
தமிழ்நாடு

நயினார் நாகேந்திரனை ஓபிஎஸ் குற்றம் சொல்வதை ஏற்றுக்கொள்ள மாட்டோம்: தமிழிசை

பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி

இணையதளச் செய்திப் பிரிவு

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனை ஓபிஎஸ் குற்றம் சொல்வதை ஏற்றுக்கொள்ள மாட்டோம் என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார்.

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் விலகுவதாக அறிவித்த நிலையில் ஓபிஎஸ் என்னிடம் கூறியிருந்தால் பிரதமர் மோடியுடான சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருப்பேன் என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார்.

ஆனால், நயினார் நாகேந்திரனை 6 முறை போனில் தொடர்புகொள்ள நான் முயற்சித்ததாகவும் அவர் தனது அழைப்பை எடுக்கவில்லை எனவும் அதனால் அவருக்கு குறுஞ்செய்தி அனுப்பிய ஆதாரம் தன்னிடம் உள்ளதாகவும் ஓபிஎஸ் கூறுகிறார்.

ஓபிஎஸ் சொல்வதில் உண்மையில்லை, நான்தான் ஓபிஎஸ்ஸை தொடர்புகொண்டேன் என நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.

இருவரும் மாறிமாறி பேசி வரும் நிலையில் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களுடன் பேசுகையில்,

"இதில் நான் கருத்து சொல்ல விரும்பவில்லை. தலைவர்கள் பொய் சொல்ல வாய்ப்பு இல்லை. ஓபிஎஸ்ஸுக்கு கருத்து இருந்தால் அதை அவர் வெளிப்படையாகச் சொல்லலாம். அவர், பாஜக தலைவர்களை குற்றம் சொல்வதை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம். ஓபிஎஸ் இன்னும் நிதானமாக தன்னுடைய அரசியல் நகர்வை நகர்த்தியிருக்கலாம்" என்று கூறியுள்ளார்.

மேலும் பேசிய அவர், "தமிழக முதல்வர் மக்களுக்கு ஒரு கடிதம் எழுதி, மத்திய அரசை எதிர்த்து, தினமும் போராடி வருவதாகக் கூறுகிறார். மத்திய அரசு தினமும் என்ன செய்து கொண்டிருக்கிறது? மத்திய அரசு பல நல்ல திட்டங்களை வழங்கி வருகிறது. மக்கள் போராடுகிறார்கள் என்று ஏன் சொல்கிறீர்கள்? திமுக அரசின் தவறான நிர்வாகத்தால் மக்கள் போராடி வருகின்றனர்.

தமிழ்நாட்டில் ஆளும் கட்சிக்கு நேரெதிராக இருந்த கட்சியைச் சேர்ந்தவர் முதல்வரைச் சென்று சந்திக்கிறார். உடல்நிலை பற்றிய விசாரிப்பு தவறு இல்லை. ஆனால் எதிர்க்கட்சியாக இருந்தவர்களை சந்தித்து கூட்டணிக்கும் பேச்சுவார்த்தை நடக்கிறது என்றால் அது துரோகம்.

அருண் ஜெட்லீ இறந்தபிறகு அவர் மீது ராகுல் காந்தி குற்றம் சாடுகிறார். திமுக 5 முறை ஆட்சியில் இருந்தும் சமூக நீதியை நிலைநாட்ட முடியவில்லை. ஆணவக் கொலைகள் இன்றும் நடப்பது வெட்கக்கேடு" என்று பேசினார்.

Senior BJP leader Tamilisai Soundararajan has said that we will not accept OPS blaming Tamil Nadu BJP leader Nainar Nagendran.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நிறுத்துங்க... ஐஸ்வர்யா மேனன்!

தாம்பரம் புதிய அரசு மருத்துவமனை: ஆக. 9-ல் முதல்வர் திறந்து வைக்கிறார்!

ஆதாரங்கள் இல்லை! சத்யேந்தர் ஜெயினுக்கு எதிரான ஊழல் வழக்கு முடித்துவைப்பு!

அமெரிக்காவுக்குச் செல்ல இனி ரூ. 13 லட்சம் டெபாசிட்? விரைவில் அறிவிப்பு வருகிறது!!

மத்திய அரசுக்கு எதிராக கேள்வி எழுப்புவதுதான் ராகுலின் வேலை: பிரியங்கா காந்தி

SCROLL FOR NEXT