அதி கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், நீலகிரி மாவட்டத்திலுள்ள பள்ளிகளுக்கு மட்டும் நாளை (ஆக. 5) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், சுற்றுலாப் பயணிகளின் நலன் கருதி, சுற்றுலாத் தலங்களும் மூடப்படும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் தென்மேற்கு பருவ மழையின் தீவிரம் காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.
இதனையொட்டி வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாளை மற்றும் நாளை மறுநாள் நீலகிரியில் கனமழை முதல் அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவித்துள்ளது.
இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை (ஆக. 5) விடுமுறை அறிவித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. மேலும், சுற்றுலாத் தலங்களும் மூடப்படுவதாக அறிவித்துள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரக்கோணத்திலுள்ள தேசிய பேரிடர் மீட்பு படையில் இருந்து 30 வீரர்கள் நீலகிரி மாவட்டத்திற்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
இதையும் படிக்க | தவெக மாநாட்டில் மாற்றம்! புதிய தேதி நாளை அறிவிப்பு!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.