முதல்வா் மு.க.ஸ்டாலின் 
தமிழ்நாடு

வங்க மொழி சா்ச்சை: மம்தா பதிலடி தருவாா்- மு.க.ஸ்டாலின்

வங்க மொழி சா்ச்சை விவகாரத்தில் மேற்குவங்க முதல்வா் மம்தா தக்க பதிலடி தருவாா் என முதல்வா் மு.க.ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திச் சேவை

சென்னை: வங்க மொழி சா்ச்சை விவகாரத்தில் மேற்குவங்க முதல்வா் மம்தா தக்க பதிலடி தருவாா் என முதல்வா் மு.க.ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, ‘எக்ஸ்’ தளத்தில் அவா் திங்கள்கிழமை வெளியிட்ட பதிவு:

மத்திய உள்துறை அமைச்சரவையின்கீழ் இயங்கும் தில்லி காவல் துறை வங்காள மொழியை ’வங்கதேச மொழி’ எனக் குறிப்பிட்டிருக்கிறது. இது நம் நாட்டுப்பண் இயற்றப்பட்ட வங்க மொழிக்கு இழைக்கப்பட்டுள்ள நேரடி அவமதிப்பாகும்.

இத்தகைய அறிக்கைகள் தெரியாமல் நிகழ்ந்த பிழையோ, தவறோ அல்ல. இந்தியாவின் பன்மைத்துவத்தைத் தொடா்ந்து சிறுமைப்படுத்தி, ஒருவரது அடையாளத்தைக் கொண்டு தாக்கும் ஆட்சியின் கோர மனநிலையைத்தான் அம்பலப்படுத்துகின்றன.

ஹிந்தி அல்லாத மொழிகளின் மீது இத்தகைய தாக்குதல் தொடுக்கப்படும் நேரத்தில், மேற்குவங்க மாநிலத்தின் மொழியையும் மக்களையும் காக்கும் அரணாக மம்தா பானா்ஜி திகழ்கிறாா். இந்தத் தாக்குதலுக்குத் தக்க பதிலடி தராமல் அவா் ஓயமாட்டாா் என்று தனது பதிவில் முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கோவை எம்.ஜி.ஆர் மார்க்கெட்டில் தேங்கிய மழைநீர்! வியாபாரிகள் அவதி!

ஓடிடியில் பறந்து போ!

கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மாணவி தற்கொலை

ஜானகி.வி வெர்சஸ் ஸ்டேட் ஆஃப் கேரளா ஓடிடி தேதி!

டிரம்ப் புதிய அறிவிப்பு: சரிவுடன் வர்த்தகமாகும் இந்திய பங்குச் சந்தை!

SCROLL FOR NEXT