ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் 
தமிழ்நாடு

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு வந்தார் அன்புமணி! காணொலியில் ராமதாஸ்!!

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு நேரில் வந்த அன்புமணி நீதிபதி அறையில் ஆஜராகியிருக்கிறார். காணொலியில் ராமதாஸ் பங்கேற்பார் என்று தகவல்.

இணையதளச் செய்திப் பிரிவு

பாமக பொதுக்குழுக் கூட்டத்துக்கு எதிரான வழக்கில், தலைவர் அன்புமணி சென்னை உயர் நீதிமன்றத்துக்கு நேரில் வந்துள்ளார். பாமக நிறுவனர் ராமதாஸ், காணொலி வாயிலாக நீதிபதியிடம் பேசுவதற்கு தயாராக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தைலாபுரம் இல்லத்தில் தனது உதவியாளர் ஒருவருடன் தனி அறையில் இருந்து நீதிபதியிடம் பேச ராமதாஸ் தயாராக இருப்பதாகக் கூறப்படுகிறது.

அன்புமணி தலைமையில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருக்கும் பாமக பொதுக்குழுக் கூட்டம் நடைபெறுமா? தடை விதிக்கப்படுமா? என்பது குறித்து இன்னும் சற்று நேரத்தில் தெரிய வரும் என்பதால், பாமகவினர் இடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நாளை சனிக்கிழமை (ஆக. 9ஆம் தேதி) பாமக பொதுக்குழுவுக்கு அன்புமணி அழைப்பு விடுத்திருப்பதை எதிர்த்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ், பாமக நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி இருவரும் இன்று மாலை 5.30 மணிக்கு வழக்குரைஞர்கள் இன்றி தன்னுடைய நீதிபதி அறைக்கு வருமாறு அழைப்பு விடுத்திருந்தார்.

நீதிபதியின் அழைப்பை ஏற்று, அன்புமணி சென்னை உயர் நீதிமன்றத்துக்கு நேரில் வந்து நீதிபதி அறையில் அமர்ந்திருக்கிறார். தன்னுடைய உடல்நிலையைக் காரணம் காட்டி, பாமக நிறுவனர் ராமதாஸ், நீதிமன்றத்துக்கு வர முடியாது என கடிதம் அனுப்பப்பட்டது. இதையடுத்து, காணொலி வாயிலாக ஆஜராக ஒப்புக் கொணடார் ராமதாஸ்.

இருவரிடமும் சமரசம் பேச நீதிபதி முயற்சி எடுத்திருக்கும் நிலையில், காணொலி வாயிலாக பேசும் வசதி உள்ள அறையில் நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ், அன்புமணியிடம் நேரிலும் ராமதாஸிடம் காணொலியிலும் பேசவிருக்கிறார்.

இதையடுத்தே, நாளை அன்புமணி அழைப்பு விடுத்த பொதுக்குழுக் கூட்டம் நடைபெறுமா என்பது தெரிய வரும்.

பாமகவில் நிறுவனர் மற்றும் தலைவர் இடையே மோதல் ஏற்பட்டிருக்கும் நிலையில், பாமக பொதுக் குழு ஆக. 9ஆம் தேதி அன்புமணி தலைமையில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டதை எதிர்த்து, பாமக நிறுவனா் ராமதாஸ் நியமித்துள்ள மாநில பொதுச் செயலாளா் முரளி சங்கா் சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு வந்த போது, ராமதாஸ் - அன்புமணி இருவரும் நீதிபதி அறைக்கு நேரில் வர அழைப்பு விடுத்திருக்கிறார் நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஹெச்-1பி விசா கட்டண உயா்வு: செப்.21-க்குப் பிறகான புதிய விண்ணப்பங்களுக்கு மட்டுமே பொருந்தும்

அமலானது ஜிஎஸ்டி சீா்திருத்தம்: மருந்துகள், மின்னணுப் பொருள்கள் விலை குறைந்தது

பாதிப்பும் வாய்ப்பும்...!

கொளத்தூா் தொகுதி வளா்ச்சி திட்டப் பணிகள் : அமைச்சா் பி.கே.சேகா்பாபு ஆய்வு

சிக்கலான வளா்ச்சிப் பணிகளைக் கைவிட்டுவிடுவது காங்கிரஸ் இயல்பு: பிரதமா் மோடி

SCROLL FOR NEXT