தமிழ்நாடு

தம்மம்பட்டி சிவன் கோவிலில் பெண்கள் பங்கேற்ற கோபூஜை!

தம்மம்பட்டி சிவன்கோவிலில் 200 பெண்கள் பங்கேற்ற கோபூஜை விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இணையதளச் செய்திப் பிரிவு

தம்மம்பட்டி சிவன்கோவிலில் 200 பெண்கள் பங்கேற்ற கோபூஜை விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

சேலம் மாவட்டம், தம்மம்பட்டி காசி ஸ்ரீ விசாலாட்சி உடனுறை காசி ஸ்ரீ விஸ்வநாதர் திருக்கோவிலில் வரலட்சுமி விரதம் மற்றும் 200 சுமங்கலி பெண்கள் பங்கேற்ற கோபூஜை விழா மற்றும் சுமங்கலி பூஜை ஆடி வெள்ளியை முன்னிட்டு கோவில் வளாகத்தில் நடைபெற்றது.

இதில் 11 பசு மாடுகள் கோவில் வளாகத்திற்கு அழைத்து வரபட்டு அதற்கு சந்தனம், குங்குமம், மஞ்சள் பெண்களால் இடப்பட்டு, பின் மாலை, வேட்டி , துண்டு அணிவிக்கப்பட்டது. மாடுகளுக்கு பன்னீர் தெளித்து, மந்திரங்கள் அனைவரும் கூற, அகத்திக்கீரை, வெல்லம், நாட்டுச்சர்க்கரை கொய்யாப்பழங்கள், வாழைப்பழங்கள் உள்ளிட்ட உணவுப்பொருள்களும் ஊட்டப்பட்டன.

மரக்காணம் - புதுச்சேரி இடையே 4 வழிச்சாலை: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

பின்னர் அனைவரும் பசுமாடுகளை வணங்கி வழிபாடு செய்தனர். இறுதியாக பெண்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் மஞ்சள் கயிறு, மஞ்சள், குங்குமம் வழங்கப்பட்டன. அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில் தம்மம்பட்டி, செந்தாரப்பட்டி, கொப்பம்பட்டி, நாகியம்பட்டி உலிபுரம், ஜங்கமசமுத்திரம் உள்ளிட்ட சுற்று வட்டார ஊர்களில் இருந்து திரளான மக்கள் பங்கேற்றனர்.

The Ko Puja ceremony was held on Friday at the Thammampatti Sivan Temple, with the participation of 200 women.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஓராயிரம் பௌர்ணமிகள்... ஆஷு ரெட்டி

கண் சிமிட்டலில்.... ஷாலினி சௌஹான்

கண்களால் கைது செய்... சுதா

சிறுமியை ஏமாற்றி தங்க நகைகள் கொள்ளை: 2 சிறுவா்கள் கைது

விழி அசையில்... ரூபினா திலாய்க்

SCROLL FOR NEXT