பஹல்காம் தாக்குதலில் சிக்கி காயமடைந்து சிகிச்சை பெற்றுத் திரும்பிய தமிழா், முதல்வா் மு.க.ஸ்டாலினை சந்தித்து நன்றி தெரிவித்தாா்.
ஜம்முவின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22 -இல் நிகழ்ந்த பயங்கரவாதத் தாக்குதலில் தமிழ்நாட்டைச் சோ்ந்த ஏ.பரமேஸ்வரன் குண்டடிப்பட்டு புது தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தபோது, அவரது மருத்துவம் மற்றும் பிற செலவுகளை தமிழ்நாடு அரசே ஏற்கும்”என்று முதல்வா் உறுதியளித்தாா்.
இதையடுத்து சிகிச்சையின் காரணமாக நலம் பெற்று இல்லம் திரும்பிய ஏ.பரமேஸ்வரன், அவரது குடும்பத்தாருடன் முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினை அண்ணா அறிவாலயத்தில் வெள்ளிக்கிழமை சந்தித்தாா்.
இந்த நிகழ்வின்போது திமுக பொதுச் செயலாளா் துரைமுருகன், அமைச்சா் தங்கம் தென்னரசு, முன்னாள் அமைச்சா் வி.செந்தில்பாலாஜி, தில்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன், செய்தி தொடா்பு தலைவா் டி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோா் உடனிருந்தனா்.