கோப்புப் படம் 
தமிழ்நாடு

தமிழக மீனவர்கள் 7 பேர் கைது! இலங்கை கடற்படையின் தொடர் அட்டூழியம்!

தமிழக மீனவர்கள் 7 பேரை இலங்கை கடற்படை கைது செய்து அட்டூழியம்

இணையதளச் செய்திப் பிரிவு

தமிழக மீனவர்கள் 8 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.

தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்து அட்டூழியம் செய்வது தொடர்ந்து நீடித்துக் கொண்டேதான் இருக்கிறது.

இலங்கை கடற்படையின் இந்த அராஜக போக்குக்கு முற்றுப்புள்ளி வைக்குமாறு மத்திய அரசிடம் மாநில அரசு தொடர்ந்து வலியுறுத்தி வந்தாலும், இதுவரையில் முடிவு கிட்டியதாய் இல்லை.

இந்த நிலையில், கச்சத்தீவு அருகே வடக்கு மன்னார் கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக(ராமேஸ்வரம்) மீனவர்கள் 7 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. மேலும், அவர்களின் ஒரு படகையும் பறிமுதல் செய்துள்ளனர்.

இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடந்த மாதம் கடிதம் எழுதியிருந்தார். இருந்தபோதிலும், இலங்கை கடற்படையின் தொடர் அட்டூழியம் முடிவுற்றதாய் இல்லை.

7 TN Fishermen arrested by SriLankan Navy

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எம்ஜிஆர், ஜெயலலிதாவை விமர்சிப்பதா?: திருமாவளவனுக்கு ஓ. பன்னீர்செல்வம் கண்டனம்

ஒன்றாக இணைந்த குடும்பம்...பாக்கியலட்சுமி தொடர் 1469 எபிசோடுகளுடன் நிறைவு!

வசந்த் ரவியின் இந்திரா டிரைலர்!

இபிஎஸ் கனவு பலிக்காது, மீண்டும் முதல்வராக ஸ்டாலின் பதவியேற்பார்: அமைச்சர் கே.என். நேரு

ஃபஹத் ஃபாசிலின் ஓடும் குதிர சாடும் குதிர டிரைலர்!

SCROLL FOR NEXT