கமல்ஹாசன்  கோப்புப்படம்.
தமிழ்நாடு

கமல்ஹாசனுக்கு கொலை மிரட்டல்- சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது.

இணையதளச் செய்திப் பிரிவு

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது.

சென்னையில் அண்மையில் நடைபெற்ற நிகழ்வில் கமல்ஹாசன் உள்ளிட்ட பிரபலங்கள் பலர் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியில் கமல்ஹாசன் சநாதானத்திற்கு எதிராக சில கருத்துக்களைத் தெரிவித்ததாக அவர் மீது புகார் எழுந்துள்ளது.

இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், சின்னத்திரை நடிகரான ரவிச்சந்திரன் கமல்ஹாசனுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்பட்டது.

இந்தநிலையில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் சுமார் 30க்கும் மேற்பட்ட மக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாகிகள் சென்னை காவல் ஆணையரை ஞாயிற்றுக்கிழமை சந்தித்து புகார் அளித்துள்ளனர்.

அதில், கமல்ஹாசனுக்கு கொலை மிரட்டல் விடுத்த நடிகர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளனர். மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணைத் தலைவரும், ஓய்வு பெற்ற ஐ.ஜி-யுமான மௌரியா, கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன் சென்று இந்த புகாரை அளித்துள்ளார்.

மிரட்டல் குறித்து காவல் துறை தற்போது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

A complaint was filed with the Chennai Police Commissioner's office alleging that Makkal Needhi Maiam leader Kamal Haasan received death threats.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழ் கலாசாரத்தின் மீதான தாக்குதல்! ஜன நாயகனுக்காக ராகுல்!

சென்னை சங்கமம் - 2026 : முதல்வர் ஸ்டாலின் நாளை தொடக்கி வைக்கிறார்!

பொங்கல் பரிசுத் தொகுப்பு நாளையும் வழங்கப்படும்!

என் அடுத்த பட இயக்குநர் இவர்தான்: அருண் விஜய்

பிரதமர் மோடி வருகை சென்னைக்கு மாற்றம்!

SCROLL FOR NEXT