கோப்புப் படம் 
தமிழ்நாடு

மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு மீண்டும் டார்ச் லைட் சின்னம் ஒதுக்கீடு!

மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு மீண்டும் டார்ச் லைட் சின்னம் ஒதுக்கப்பட்டது பற்றி..

இணையதளச் செய்திப் பிரிவு

வரும் சட்டப்பேரவை தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு டார்ச் லைட் சின்னத்தை ஒதுக்கியுள்ளது தேர்தல் ஆணையம்.

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது. இதையடுத்து கட்சிகள் சின்னம் கேட்டு தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை விடுத்த நிலையில் கட்சிகளுக்கு சின்னங்கள் ஒதுக்கப்பட்டு வருகின்றன.

அதன்படி விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்திற்கு 'விசில்' சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.

அதேபோல கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு மீண்டும் 'டார்ச் லைட்' சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.

கடந்த 2019 மக்களவைத் தேர்தல், 2021 பேரவைத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி தனித்துப் போட்டியிட்ட நிலையில் 2024 மக்களவைத் தேர்தலில் திமுகவுடன் கூட்டணியில் இணைந்தது.

வரும் பேரவைத் தேர்தலிலும் மக்கள் நீதி மய்யம் திமுகவுடன் கூட்டணியில் போட்டியிடும் என்றே கூறப்படுகிறது. தொகுதிப் பங்கீட்டைப் பொருத்து மக்கள் நீதி மய்யம் எந்த சின்னத்தில் போட்டியிடும் என்று தெரியும்.

Torch light symbol allocated for Makkal needhi maiam party by EC

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஊழலை ஒழிக்கும் சின்னம் விசில்: விஜய்

ஆளுநர் உரையுடன் தொடங்குவதை ஒழிக்க வேண்டும்: முதல்வர் ஆவேசம்

ஓடிடியில் வெளியான அருண் விஜய்யின் ரெட்ட தல!

“சட்டப்பேரவையில் பேச அனுமதி மறுக்கப்பட்டது!” வெளிநடப்பு செய்தபின் EPS பேட்டி!

பிரதமர் தொடக்கிவைத்த வந்தே பாரத் ரயிலில் அசைவ உணவு இல்லை: திரிணமூல் காங்கிரஸ் எதிர்ப்பு

SCROLL FOR NEXT