பனையூரில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் உடனான தூய்மைப் பணியாளர்களின் சந்திப்பு நிறைவு பெற்றது.
11வது நாளாக சென்னை ரிப்பன் மாளிகை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தூய்மைப் பணியாளர்கள், தவெக அலுவலகத்தில் விஜய்யை சந்தித்து இன்று (ஆக. 11) பேசினர்.
இதில், தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டதாகத் தெரிகிறது. தூய்மைப் பணியாளர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது.
சென்னை பனையூரில் உள்ள தவெக அலுவலகத்துக்கு தூய்மைப் பணியாளர்களை அழைத்து, அக்கட்சியின் தலைவர் விஜய் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களின் குறைகளை இன்று (ஆக. 11) கேட்டறிந்தார்.
இதில், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தூய்மைப் பணியாளர்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டு போராட்டத்துக்கு ஆதரவு கோரினர்.
பணி பாதுகாப்பு, பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் 11வது நாளாகத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இப்போராட்டத்துக்கு அதிமுக, நாம் தமிழர் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், தவெக தலைவர் விஜய் தூய்மைப் பணியாளர்களை அழைத்து குறைகளைக் கேட்டறிந்தார்.
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தூய்மைப் பணியாளர்களுடன் அமைச்சர் சேகர் பாபு, மேயர் பிரியா ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். எனினும், அதில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படாததால், தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருகிறது.
இதையும் படிக்க | விழுப்புரம் வழித்தட ரயில் சேவையில் மாற்றம்! முழு விவரம்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.