தங்கம் விலை 2 நாள்களில் ரூ.1200 குறைவு: இன்றைய நிலவரம்!
தங்கம் விலை 2 நாள்களில் ரூ.1200 சரிந்துள்ளதைப் பற்றி...
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை செவ்வாய்க்கிழமை காலை சவரனுக்கு ரூ.680 குறைந்துள்ளது.
இந்த மாதத் தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலை ஏற்ற இறக்கத்தை சந்தித்துவருகிறது. அதன்படி, இந்த வாரத்தின் முதல் நாளான நேற்று சென்னையில் ஆபரணத் தங்கம் விலை குறைந்திருந்த நிலையில், இன்றும் (ஆக.12) கிராமுக்கு ரூ.80 குறைந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.9,295-க்கு விற்பனையாகிறது.
அதேசமயம் சவரனுக்கு ரூ.640 குறைந்து, ஒரு சவரன் தங்கம் ரூ.74,360க்கு விற்பனை செய்யப்படுகிறது.
Advertisement
Advertisement
கடந்த இரண்டு நாள்களில் மட்டும் தங்கத்தின் விலை ரூ.1200 குறைந்துள்ளதால், இல்லத்தரசிகளும், தங்க முதலீட்டாளர்களும் சற்று நிம்மதியடைந்துள்ளனர்.
வெள்ளி விலையில் கிராமுக்கு ரூ.1 குறைந்து ஒரு கிராம் ரூ.126-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ. 1,26,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
Gold price Today
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.