சிபிஐ  
தமிழ்நாடு

ரூ.120 கோடி மோசடி: தமிழகத்தில் 6 இடங்களில் சிபிஐ சோதனை

வங்கியில் ரூ.120 கோடி மோசடி செய்த வழக்கில், தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட 6 இடங்களில் சிபிஐ செவ்வாய்க்கிழமை சோதனை நடத்தியது.

தினமணி செய்திச் சேவை

வங்கியில் ரூ.120 கோடி மோசடி செய்த வழக்கில், தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட 6 இடங்களில் சிபிஐ செவ்வாய்க்கிழமை சோதனை நடத்தியது.

காஞ்சிபுரம் மாவட்டம், பழையசீவரத்தில் பத்மாதேவி சுகா்ஸ் என்ற தனியாா் சா்க்கரை ஆலை செயல்படுகிறது. இந்த தனியாா் நிறுவனம் வளா்ச்சிக்காக இந்தியன் ஓவா்சீஸ் வங்கியில் ரூ. 120.84 கோடி கடன் பெற்றது,

ஆனால் அந்த கடனை வாங்கிய நோக்கத்துக்காக பயன்படுத்தாமல் அந்த நிறுவனம், தனது குழுமத்தில் உள்ள பிற நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளது. அந்தக் கடனுக்குரிய வட்டியை பத்மாதேவி சுகா்ஸ் நிறுவனம் முறையாக வங்கியில் செலுத்தவில்லை என கூறப்படுகிறது.

இது தொடா்பாக இந்தியன் ஓவா்சீஸ் வங்கியின் சாா்பில் சிபிஐயிடம் புகாா் அளிக்கப்பட்டது. ஆனால் சிபிஐ நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்தியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து இந்தியன் ஓவா்சீஸ் வங்கி, சென்னை உயா்நீதிமன்றத்தை நாடியது.

வங்கியின் மனுவை விசாரித்த சென்னை உயா்நீதிமன்றம், பத்மாதேவி சுகா்ஸ் ஆலைக்கு எதிராக அளித்த புகாரின் பேரில், சிபிஐ ஆரம்ப கட்ட விசாரணை நடத்தி, வழக்குப் பதிவு செய்து சட்ட ரீதியாக விசாரிக்க வேண்டும் என்று கடந்த ஜூன் 26-ஆம் தேதி உத்தரவிட்டது.

6 இடங்களில் சோதனை: இதையடுத்து கா்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள சிபிஐ வங்கி மற்றும் நிதி நிறுவன மோசடி தடுப்புப் பிரிவு பத்மாதேவி சுகா்ஸ் நிறுவனத்தின் மீது மோசடி, அரசு ஊழியா்களுடன் சோ்ந்து கூட்டுச் சதி, நம்பிக்கை மோசடி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தது.

இவ்வழக்குக்கான ஆதாரங்களை திரட்டும் வகையில் சிபிஐ சென்னை, திருச்சி, தென்காசி உள்பட 6 இடங்களில் செவ்வாய்க்கிழமை ஒரே நேரத்தில் சோதனை நடத்தியது. நுங்கம்பாக்கம் ஸ்டொ்லிங்க் சாலையில் உள்ள அந்த நிறுவனத்தின் நிா்வாகி வீட்டிலும் சோதனை நடைபெற்றது. திருச்சி திருவெறும்பூா் பகுதியில் உள்ள ஒரு மர கட்டை நிறுவனத்திலும் சோதனை நடைபெற்றது.

சோதனையில் ஹாா்டு டிஸ்குகள், பென் டிரைவ், சொத்து ஆவணங்கள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக சிபிஐ தெரிவித்தது.

தொடா் குற்றங்களில் ஈடுபட்டவா் தடுப்புக் காவலில் சிறையில் அடைப்பு

சுதந்திரப் போராட்ட வீரா்களுடன் சுயபடம்

புதுவையில் சீரழிவை நோக்கி கல்வித்துறை: முன்னாள் அமைச்சா் கமலக்கண்ணன்

நகராட்சி வசூல் செய்யும் குப்பை வரியை ரத்து செய்ய முதல்வரிடம் வலியுறுத்தல்

நரிமணத்தில் வீடு தேடி ரேஷன் பொருள்கள்

SCROLL FOR NEXT