ஆடிக் கிருத்திகையை முன்னிட்டு அரக்கோணம் - திருத்தணி இடையே நாளை(ஆக. 14) முதல் - ஆக.18 வரை 5 நாள்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
திருத்தணி முருகன் கோயிலில் ஆடிக் கிருத்திகை விழா வரும் ஆக. 14 -ஆம் தேதி தொடங்கி 5 நாள்கள் விமர்சையாக நடைபெறுவதால் ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்படுகிறது.
அறுபடை வீடுகளில் 5-ஆம் படை வீடாகத் திகழும் திருத்தணியில் முக்கிய விழாவான ஆடிக் கிருத்திகை 14 -ஆம் தேதி வியாழக்கிழமை தொடங்கி 18- ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இவ்விழாவுக்கு 5 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் அரக்கோணம் - திருத்தணி - அரக்கோணம் இடையே பயணிகள் சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
3 சிறப்புகள் ரயில்கள் இயக்கப்படவுள்ளன. அரக்கோணத்தில் இருந்து திருத்தணிக்கு காலை 10. 20 மணி, பிற்பகல் 1 மணி, பிற்பகல் 2.50 மணி என 3 சேவைகள் இயக்கப்படும்.
அதேபோல் திருத்தணியில் இருந்து அரக்கோணத்துக்கு காலை 10.50 மணி, பிற்பகல் 1.30 மணி, பிற்பகல் 3.20 மணி என 3 சேவைகள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: கவின் கொலை வழக்கில் சுர்ஜித்தின் சகோதரர் கைது!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.