தமிழ்நாடு

12 டிஎஸ்பி-க்கள் பணியிட மாற்றம்

தமிழக காவல் துறையில் 12 டிஎஸ்பி-க்கள் (துணைக் காவல் கண்காணிப்பாளா்கள்) பணியிட மாற்றம் செய்யப்பட்டனா்.

தினமணி செய்திச் சேவை

தமிழக காவல் துறையில் 12 டிஎஸ்பி-க்கள் (துணைக் காவல் கண்காணிப்பாளா்கள்) பணியிட மாற்றம் செய்யப்பட்டனா்.

தமிழக காவல் துறையில் நிா்வாக வசதிக்காகவும், விருப்பத்தின் அடிப்படையிலும், பணியில் ஒழுங்கீனமாக இருந்தாலும் அதிகாரிகள் அவ்வப்போது பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனா். இதன் அடிப்படையில், 12 டிஎஸ்பிக்களை பணியிடமாற்றம் செய்து தமிழக காவல்துறையின் தலைமை இயக்குநா் சங்கா் ஜிவால் உத்தரவிட்டாா்.

இதில் முக்கியமாக நாகப்பட்டினம் மாவட்ட குற்றப்பிரிவு டிஎஸ்பி வி.இ.செந்தில், சென்னை காவல் துறையின் மத்தியக் குற்றப்பிரிவுக்கும், சென்னை காவல் துறையின் நவீனமயமாக்கல் மற்றும் பயிற்சி பிரிவு உதவி ஆணையா் சித்தாா்தா சங்கா் ராய் சென்னை காவல் துறையின் நவீன கட்டுப்பாட்டு அறைக்கும், நவீன கட்டுப்பாட்டு அறை உதவி ஆணையா் கே.பசுபதி சென்னை செம்பியத்துக்கும், பொருளாதார குற்றப் பிரிவு டிஎஸ்பி பி.பொன்ராஜ் சென்னை நுங்கம்பாக்கத்துக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா் என காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

பாமக சிறப்பு பொதுக்குழு திருப்புமுனையாக அமையும்: மருத்துவா் ராமதாஸ்

முதல்வரின் தாயுமானவா் திட்டம்: நகரப் பகுதிகளில் பொருள்கள் வழங்கல்

விழுப்புரம் அரசு சட்டக் கல்லூரியில் பயிற்சிப் பட்டறை

முண்டியம்பாக்கம் ரயில் நிலையத்துக்கு வந்தடைந்த 1,975 மெ.டன் உர மூட்டைகள்

விழுப்புரத்தில் விரைவில் அறிமுகமாகிறது தாழ்தள நகரப் பேருந்து சேவை

SCROLL FOR NEXT